முகேஷ் அம்பானியை துரத்தும் வருமானவரித் துறை!

 

முகேஷ் அம்பானியை துரத்தும் வருமானவரித் துறை!

கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதியன்று முகேஷுக்கு வருமான வரித்துறை ஒரு நோட்டீஸ் அனுப்பியது.

அனில் அம்பானிக்கு ஏற்பட்டு வந்த சரிவை தொடர்ந்து, அண்ணன் முகேஷ் அம்பானிக்கும் சறுக்கல்கள் ஏற்பட தொடங்கியுள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதியன்று முகேஷுக்கு வருமான வரித்துறை ஒரு நோட்டீஸ் அனுப்பியது. அவருக்கோ , அவரது குடும்பத்தினருக்கோ வெளிநாடுகளில் அறிவிக்கப்படாத சொத்தோ வருமானமோ உண்டா என்று அந்த நோட்டீஸில் கேட்கப் பட்டு இருந்தது.இப்படி ஒரு நோட்டீஸ் எங்களுக்கு வரவே இல்லை என்று ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மறுத்திருந்தது.

ttn

இந்த நிலையில் முகேஷின் ரகசியப் பணபரிமாற்றத் தகவல்கள் குறித்து உக்ரைன் நாட்டிடம் தகவல் கேட்கப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது. உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து,லக்ஸம்பர்க்,செய்ண்ட் லூயிஸ், சுவிஸ்,மொரீஷியஸ்,பெல்ஜியம் ஆகிய நாடுகளுடன் கருப்புபணம், தீவிரவாதத்தடுப்பு, ரகசியப் பணப்பரிமாற்றம் குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்ளும் ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பம் இட்டு இருக்கிறது. இந்த நாடுகள் இடையே இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தமும் உண்டு. 

ttn

முகேஷ் தவிர அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு கேமேன் தீவில் இருக்கும் ரகசிய வங்கிகளில் பணம் இருக்கிறது என்கிற செய்திகள் கசியத் துவங்கி இருக்கின்றன. இது தவறு செய்த ஒரு தொழிலதிபர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை மட்டும்தானா,இல்லை அம்பானிகளை கொஞ்சம் தட்டி வைத்து தங்களுக்கு வேண்டிய இன்னொரு குழுமத்தை நாட்டின் நம்பர் ஒண்ணாக்க நடக்கும் முயற்சிகளா என்கிற ஐயமும் இந்திய பெரு முதலாளிகள் இடையே நிலவுகிறது.