முகேஷ் அம்பானியின் பார்ட்னர் நிறுவனத்திற்கு வந்த சோதனை – ஒரேநாளில் 320 பில்லியன் டாலர் நஷ்டம்

 

முகேஷ் அம்பானியின் பார்ட்னர் நிறுவனத்திற்கு வந்த சோதனை – ஒரேநாளில் 320 பில்லியன் டாலர் நஷ்டம்

முகேஷ் அம்பானியின் பார்ட்னர் நிறுவனமான சவுதி அராம்கோவின் பங்குகள் ஒரே நாளில் 320 பில்லியன் டாலர் அளவிற்கு நஷ்டம் அடைந்துள்ளது.

மும்பை: முகேஷ் அம்பானியின் பார்ட்னர் நிறுவனமான சவுதி அராம்கோவின் பங்குகள் ஒரே நாளில் 320 பில்லியன் டாலர் அளவிற்கு நஷ்டம் அடைந்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெட்ரோல், டீசல் தேவை குறைந்து வருகிறது. இந்த நிலையில், மற்ற நாடுகளின் போட்டியை சமாளிக்கும் வகையில் சந்தையில் உற்பத்தியை அதிகரித்து கச்சா எண்ணெய் வர்த்தகத்தை கைப்பற்ற சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. அதனால் விலை குறைப்பு உத்தியை அந்த நாடு கையில் எடுத்துள்ளது. அந்த வகையில் 29 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலையை சவுதி அரேபியா குறைத்துள்ளது.

ttn

இந்நிலையில், சவுதி அரேபியாவின் இந்த அதிரடி முடிவால் 2 நாட்களில் சவுதி அராம்கோ நிறுவனம் வரலாறு காணாத அளவில் 320 பில்லியன் டாலர்களை இழந்துள்ளது. இதனால் அந்நிறுவனம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. சுமார் 2 டிரில்லியன் டாலருக்கு மதிப்பிடப்பட்ட சவுதி அராம்கோ நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 1.4 டிரில்லியன் டாலர்களாக சரிந்துள்ளது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை சவுதி அராம்கோ பல பில்லியன் டாலர்களுக்கு விரைவில் வாங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.