’முகிலன் மட்டுமல்ல, ஆண் போராளிகள் அத்தனை பேருமே பொறுக்கிகள் தான்’…கவிஞர் தாமரை தடாலடி…

 

’முகிலன் மட்டுமல்ல, ஆண் போராளிகள் அத்தனை பேருமே பொறுக்கிகள் தான்’…கவிஞர் தாமரை தடாலடி…

போலிப் போராளி’களெல்லாம் நிறையப் பார்த்தாயிற்று. பெண் பொறுக்குவதற்காகவே இந்த ‘போராளி’ வேடம் பூணும் அயோக்கியர்களை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை

5 மாதங்களுக்குப் பின் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருக்கும் முகிலன் குறித்துக் கருத்துச் சொல்லியிருக்கும் கவிஞர் தாமரை சமூகத்தில் சமூக செயல்பாட்டாளர் என்று சொல்லிக்கொண்டு திரியும் அத்தனை ஆண்களுமே பொம்பளைப் பொறுக்கிகள்தான் என்று அடாவடியாக கருத்துத் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

கைதான முகிலன் பற்றி  விமர்சனம் செய்துள்ள கவிஞர் தாமரை…

thamarai

இதோ….முகிலனைப் புனித பிம்பமாக சித்தரிப்பவர்களுக்கு, கவிஞர் தாமரையின் பதில்.ஐயோ பாவம்…நீங்க இந்த ‘” போராளி அரசியல் வட்டாரத்து’” க்குப் புதிது போல…கொஞ்சம் தள்ளியிருந்து வேடிக்கை பாருங்கள்…

இந்த மாதிரி ‘போலிப் போராளி’களெல்லாம் நிறையப் பார்த்தாயிற்று. பெண் பொறுக்குவதற்காகவே இந்த ‘போராளி’ வேடம் பூணும் அயோக்கியர்களை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை..நாங்கள் கூடவே ( சோறு போட்டு வைத்து ) வாழ்ந்திருக்கிறோம். எங்களுக்குத் தெரியும், ஆதாரமில்லாமல் பேசவில்லை.Wait and Watch.

mukilan

பெண்ணை ஏமாற்றி விட்டு, விவகாரம் வெளியே வந்தவுடன் ஓடி ஒளிந்து கொண்டு, இப்போது ‘வெளியே’ வந்திருக்கும் அன்னாரை நீங்கள் வேண்டுமானால் மாலை போட்டு வரவேற்கப் போங்கள்..எங்களிடமிருந்து செருப்புதான் கிடைக்கும்.முகிலன் இன்னொரு தியாகு அவ்வளவுதான். தியாகு தப்பி வெளியே சுற்றுகிறான், முகிலன் உள்ளே போகப் போகிறான்…
கவிஞர்_தாமரை…என்று பதிவிட்டிருக்கிறார். அவருக்கு அவ்வப்போது பாடல் எழுத வாய்ப்பு தரும் ஒன்றிரண்டு இயக்குநர்களும் தாமரையின் இக்கருத்தால் வெகுண்டெழுந்திருக்கிறார்கள்.