முகிலன் குறித்து விசாரிக்க ப்ரன்ட் லைன் டிபண்டர்ஸ் அமைப்பு வலியுறுத்தல்

முகிலன் குறித்து விசாரிக்க ப்ரன்ட் லைன் டிபண்டர்ஸ் அமைப்பு வலியுறுத்தல்

மனித உரிமைகள் பாதுகாப்பிற்கான சர்வதேச அமைப்பாக செயல்பட்டு வருகிறது அயர்லாந்து மற்றம் பெல்ஜியத்தை சேர்ந்த் ப்ரன்ட் லைன் டிபண்டர்ஸ். ஸ்டெர்லைட் போராட்டம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி ஆவணப்படம் வெளியிட்ட சமூக ஆர்வலர் முகிலன் காணாமல்போனது பற்றி விசாரிக்க இங்குள்ள அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி, கொளுத்தியது யார்? – மறைக்கப்பட்ட உண்மைகள் என்ற ஆவணப்படத்தை வெளியிட்டார் சமூக ஆர்வலர் முகிலன். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, காவல்துறையும் ஸ்டெர்லைட் அதிகாரிகளும் இணைந்து நடத்திய திட்டமிட்ட சதி என அந்த ஆவணப்படம் தெரிவிக்கிறது. இதனை வெளியிடும்போதே தன் உயிருக்கு காவல்துறையால் ஆபத்து நேர வாய்ப்புள்ளது என முகிலன் தெரிவித்திருந்தார். பிப்ரவரி 15-ஆம் தேதி இரவு முதலே முகிலனை காணவில்லை. இன்னும் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. இந்நிலையில் முகிலன் குறித்த விசாரணையை தீவிரப்படுத்த சொல்லி ப்ரன்ட் லைன் டிபண்டர்ஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மனித உரிமைகள் பாதுகாப்புக்காக போராடுபவர்கள் இந்தியாவில் பாதுகாப்பான சூழலில் இல்லை என்பதை சுட்டிக்காட்டிய ப்ரன்ட் லைன் டிபண்டர்ஸ், இங்குள்ள அதிகாரிகளை விரைந்து நடவடிக்கை எடுக்ககோரியுள்ளது.

இதுகுறித்து  ப்ரன்ட் லைன் டிபண்டர்ஸ்

1. முகிலன் இருப்பிடத்தை அறிவதற்கு தேவையான அத்தனை நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். அவரது உடல் மற்றும் உளவியல் பாதுகாப்புக்கான நம்பிக்கையை அளிக்க வேண்டும்.

2. முகிலன் காணமல்போனது பற்றி விரைவாக பாரபட்சமற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

3. எந்த சூழலிலும் மனித உரிமைகள் பாதுகாப்புக்காக பாடுபடும் ஆர்வலர்கள் தடையின்றி பயமின்றி பணிபுரியும் நம்பிக்கையை அவர்களுக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.