முகிலனை கொலை செய்தாரா எடப்பாடி பழனிசாமி?  சமூக வலைதளங்களில் காட்டம்!!

 

முகிலனை கொலை செய்தாரா எடப்பாடி பழனிசாமி?  சமூக வலைதளங்களில் காட்டம்!!

சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போனதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

சென்னை: சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போனதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

அணு உலை எதிர்ப்புப் போராட்டம், ஆற்று மணல் கொள்ளை எதிர்ப்புப் போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் என பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்புப் போராட்டங்களில் பங்கெடுத்தவர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன். அவர், சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில், “கொளுத்தியது யார்? மறைக்கப்பட்ட உண்மைகள்?” என்ற தலைப்பிலான ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். இதை வெளியிடுவதால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதையும் அந்த சந்திப்பிலேயே முகிலன் கூறியிருந்தார். கடந்த 16 ஆம் தேதி அதிகாலை முதல் அவரை காணவில்லை. தமிழக காவல்துறையே முகிலனை சட்ட விரோதமாக கைது செய்து வைத்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஐந்து நாட்களாகியும் முகிலன் பற்றிய எந்த தகவலும் இல்லை. ஸ்டெர்லைட் பற்றிய ஆவணப்படத்தை வெளியிட்ட காரணத்துக்காக முகிலன் கடத்தப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

ஸ்டெர்லைட் நிறுவனமும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து முகிலனை கொலை செய்துவிட்டதா என சமூக வலைதளங்களில் அதிகமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் காவலர்களால் சுடப்பட்டவர்கள் சமூக விரோதிகள் அல்ல, அது அரச பயங்கரவாதம் என்பதை சுட்டும் வகையில் முகிலனின் படம் அமைந்துள்ளது. சமூக ஆர்வலர்களும், முன்னணி பத்திரிகையாளர்களும் முகிலன் எங்கே என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் போடப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பாக முகிலன் பற்றி சென்னை, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 22-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.