முகிலனுக்கு நெஞ்சுவலி! ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!! நாடகத்தை ஆரம்பித்த தமிழக காவல்துறை…

முகிலனுக்கு நெஞ்சுவலி! ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!! நாடகத்தை ஆரம்பித்த தமிழக காவல்துறை…

நேற்று நள்ளிரவு 2 மணி முதல் 14 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நெஞ்சு வலிக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் முகிலனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் முகிலனை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதில் காலதாமதம் ஏற்படும் என தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. 

நேற்றிரவு 2 மணியளவில் தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடத்தின் முதல் மாடியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முகிலனுக்கு பொது மருத்துவ பரிசோதனை, இதய தொடர்பான பரிசோதனை, உளவியல் ரீதியான பரிசோதனை மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. 

மேலும் பரிசோதனைகள் முடிந்த பிறகு அவர் உடலும், மனமும் நலமாக இருந்தால் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அவருக்கு உடலளவிலும், மனதளவிலும் ஏதேனும் பாதிப்புகள் இருப்பின் அவருக்கு  தொடர்ந்து ஸ்டான்லி ஆஸ்பத்திரியிலேயே உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

நெஞ்சு வலி காரணமாக 14 மணி நேரத்திற்கும் மேலாக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில்  சிகிச்சையில் இருக்கும் முகிலனுக்கு தொடர்ந்து இதய தொடர்பான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் முகிலனை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதில் சிபிசிஐடி போலீசாருக்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவருடைய இதய செயல்பாடுகள் மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அனைத்து பரிசோதனைகளின் முடிவுகளுக்கு பிறகே முகிலன் டிஸ்சார்ஜ் செய்யப்படுவாரா? அல்லது ஆஸ்பத்திரியிலேயே அனுமதிக்கப்படுவாரா? என்பது தெரியவரும்.