முகினின் தந்தை மரணத்தைத் தொடர்ந்து சாண்டி மாஸ்டர் வீட்டிலும் நேர்ந்த மரணம்..சோகத்தில் மூழ்கிய சாண்டி குடும்பம்!

 

முகினின் தந்தை மரணத்தைத் தொடர்ந்து சாண்டி மாஸ்டர் வீட்டிலும் நேர்ந்த மரணம்..சோகத்தில் மூழ்கிய சாண்டி குடும்பம்!

கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த சில்வியாவின் தந்தை இன்று காலமானார்.

‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சிகளில் அறிமுகமானவர் சாண்டி. தனது நகைச்சுவை மற்றும் பேச்சுத்திறன் மூலம் அனைவரும் மனதையும் கொள்ளைக் கொண்ட சாண்டி தற்போது ஒரு பெரிய நடன இயக்குனராக உருவெடுத்துள்ளார்.

ttn

குறிப்பாக பிக் பாஸ் போட்டி இவரது வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்றே சொல்லலாம். இதுவரை நடந்த பிக் பாஸ் போட்டியில் மிகவும் ஹிட்டானது சீசன் 3 தான். அதற்கு ஒரு முக்கிய காரணம் சாண்டி. 

ttn

சாண்டி பல ஆண்டுகளாக நடிகை காஜலுடன் நடிகை காஜலுடன் லிவ்விங் டுகேதரில் இருந்து பின்னர், அவர்களுக்கிடையே ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன் பின்னர் தனது டேன்ஸ் கிளாசுக்கு வந்த சிந்தியா என்ற பெண்ணின் அக்காவான சில்வியா என்னும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சாண்டி. அவர்களுக்கு ‘சுசானா மைக்கேல்’ என்னும் அழகான பெண் குழந்தை உள்ளது.

ttn

பிக் பாஸில் நடந்த ப்ரீஸ் டாஸ்க்கின் போது அந்த குழந்தை உள்ளே வந்த போது சாண்டி கதறி அழுத தருணம், பார்வையாளர்கள் மனதை உருக்கியது. சுசானாவை செல்லமாக லாலா என்று அழைக்கும் சாண்டி, பிக் பாஸில் பிரபலமானதற்கு அவரது மகளும் ஒரு முக்கிய காரணம். 

ttn

சாண்டி- சில்வியாவின் திருமணம் சீக்கிரமாக நடத்தப் பட்டதற்குக் காரணம். சில்வியாவின் தந்தை உடல்நிலை தான். கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த சில்வியாவின் தந்தை இன்று காலமானார்.

ttn

இதனால் சாண்டி மாஸ்டர் உட்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். நேற்று காலை பிக்பாஸ் போட்டி வெற்றியாளர் முகினின் தந்தை காலமானதைத் தொடர்ந்து சாண்டி மாஸ்டர் வீட்டிலும் ஒரு மரணம் நேர்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.