முகம் ‘பளிச்’சென்று தெரியனுமா… பத்து விதமான மாம்பழ ஃபேஸ் பேக்…

 

முகம் ‘பளிச்’சென்று தெரியனுமா… பத்து விதமான மாம்பழ ஃபேஸ் பேக்…

மாம்பழத்தை பழங்களின் ராஜா என்று அழைப்பார்கள் அது ஏன் என்று நீங்கள் நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா!? காரணம், மாம்பழத்தின் சுவை மட்டுமின்றி அதில் ஏராளமான நன்மைகளும் உண்டு! நமது சருமத்தை பாதுகாத்து அதை ‘பளிச்’சென்று  ஆக்கும். இப்போது மாம்பழத்தை பத்து விதமான ஃபேஸ் பேக்கில் எப்படி உபயோகிக்கலாம் என்று பார்ப்போம்…

மாம்பழத்தை பழங்களின் ராஜா என்று அழைப்பார்கள் அது ஏன் என்று நீங்கள் நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா!? காரணம், மாம்பழத்தின் சுவை மட்டுமின்றி அதில் ஏராளமான நன்மைகளும் உண்டு! நமது சருமத்தை பாதுகாத்து அதை ‘பளிச்’சென்று  ஆக்கும். இப்போது மாம்பழத்தை பத்து விதமான ஃபேஸ் பேக்கில் எப்படி உபயோகிக்கலாம் என்று பார்ப்போம்…

mango

 
இப்போ எதுக்கு இப்படி பத்துவிதமான டிப்ஸ்ன்னு கேக்குறீங்களா..? இப்போதான் சீசன் ஆரம்பிச்சிருக்கு.செயற்கையா பழுக்க வைத்த மாம்பழமாக இல்லாமல் உங்கள் வீட்டில்,அல்லது இயற்கையாக பழுத்த பழமாக பார்த்து வாங்கி,இதை ட்ரை பண்ணிப் பாருங்க.
 
 
1. மாம்பழம் மற்றும் முல்தானி மெட்டி
 

தேவையான பொருட்கள்:
மாம்பழச்சாறு- 2 tsp
தயிர்- 1 tsp
முல்தானி மெட்டி- 3 tsp
 
ஒரு பாத்திரத்தில் மாம்பழச்சாறு,தயிர் மற்றும் முல்தானி மெட்டியை எடுத்து பேஸ்ட் பதத்திற்கு நன்கு கலக்கிக் கொள்ளவும்.பிறகு முகத்தில் பூசிக்கொண்டு பதினைந்து நிமிடம் கழித்து முகத்தை கழுவவேண்டும்.உங்கள் முகம் பொலிவுடன் காணப்படும்
 
2. மாம்பழம் மற்றும் அவகாடோ

 
தேவையான பொருட்கள்:
மாம்பழச்சாறு – 2 tsp
அவகாடோ- 2 tsp
தேன் – 2 tsp
 
இவை மூன்றையும் ஒரு பாத்திரத்தில் நன்கு கலக்கி முகத்தில் பூசிக் கொள்ளவும் 30 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்
 
3. மாம்பழம் மற்றும் ஓட்ஸ்

oats

 
தேவையான பொருட்கள்:
மாம்பழச்சாறு – 2 tsp
ஓட்ஸ் – 2 tsp
பாதாம் – 7 ( இரவு முழுவதும் ஊற வைக்கவும்)
பால் – 2 tsp
 
ஓட்ஸை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.இதை பாதாமுடன் சேர்க்க வேண்டும். முகத்தில் பூசிய பிறகு 15 நிமிடம் விட்டு வைத்து,குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.
 
4. மாம்பழம் மற்றும் பன்னீர்
 
தேவையான பொருட்கள்:
மாம்பழச்சாறு- 2 tsp
தயிர் – 2 tsp
பன்னீர் – 2 tsp
முல்தானி மெட்டி – 2 tsp
 
ஒரு பாத்திரத்தில் மாம்பழ சாறு பன்னீர் மற்றும் முல்தானிமெட்டியை சேர்த்துக் கொள்ளவும்.பேஸ்ட் பதத்தை அடைய தேவையான அளவு தயிரை சேர்த்துக் கொள்ளவும்.முகத்தில் பூசிய பிறகு பதினைந்து நிமிடம் கழித்து முகத்தை கழுவவேண்டும்.
 
5. மாம்பழம் மற்றும் முட்டை வெள்ளை
 
தேவையான பொருட்கள்:
மாம்பழச்சாறு – 2 tbsp
ஒரு முட்டையின் வெள்ளை கரு
 
வெள்ளைக் கருவை நன்றாக அடித்துக் கொண்டு,மாம்பழச்சாறுடன் சேர்க்க வேண்டும். கண்களை மட்டும் விட்டுட்டு முகத்தில் பூசிக் கொள்ளவும். பதினைந்து நிமிடம் கழித்து முகத்தை அந்த நீரினால் கழுவ வேண்டும்.
 
6. மாம்பழம் மற்றும் பால்
 
தேவையான பொருட்கள்:
மாம்பழச்சாறு – 2 tsp
பால் – 2 tsp
 
ஒரு பாத்திரத்தில் மாம்பழ சாறு மற்றும் பாலை சேர்த்து பேஸ்ட் பதத்தில் கலக்கிக் கொள்ளவும்.பேஸ்ட்டை முகத்தில் பூசிக்கொண்டு,30 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்
 
7. மாம்பழம் மற்றும் கோதுமை மாவு
 
தேவையான பொருட்கள்:
மாம்பழச்சாறு – 2 tsp
கோதுமை மாவு – 2 tsp
தேன் – 1 tsp
 
மாம்பழச்சாறு கோதுமை மாவு மற்றும் தேனை நன்கு கலக்கிக் கொள்ளவும். பிறகு முகத்தில் பூசிக்கொள்ளவும். பதினைந்து நிமிடம் கழித்து முகத்தை கழுவிக் கொள்ளவும்.
 
8. மாம்பழம் மற்றும் கடலை மாவு
 
தேவையான பொருட்கள்:
மாம்பழச்சாறு – 4 tbsp
கடலை மாவு – 2 tbsp
தேன் – 1 tsp
தயிர் – 2 tbsp
 
மாம்பழச்சாறு கடலை மாவு மற்றும் தேனை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும் பேஸ்ட் பதத்தை அடைய தயிரை தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும்.முகத்தில் பூசிய பிறகு 30 நிமிடம் கழித்து முகத்தை கழுவவேண்டும்.
 
9. மாம்பழம் மற்றும் சர்க்கரை
 
தேவையான பொருட்கள்:
மாம்பழச்சாறு – 2 tsp
சர்க்கரை – 1 tsp
பால் – 2 tsp
 
மாம்பழச்சாறு சர்க்கரை மற்றும் பாலை ஒரு பாத்திரத்தில் நன்கு கலக்கிக் கொள்ளவும் இதை முகத்தில்  5 நிமிடம் வரை நன்றாக தேய்த்துக் கொள்ளவும் பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
 
10. மாம்பழம் மற்றும் ஜாதிக்காய் போடி
 
தேவையான  பொருட்கள்:
மாம்பழச்சாறு – 2 tbsp
இலவங்கப்பட்டை தூள் – 1/2 tsp
ஜாதிக்காய் தூள் – 1/2 tsp
 
முகத்தை முதலில் நன்கு கழுவிக் கொள்ளவும்.பிறகு மாம்பழச்சாறு லவங்க  பட்டை தூள் மற்றும் ஜாதிக்காய்த்தூளை நன்கு கலக்கிக் கொள்ளவும்,முகத்தில் பூசிய பிறகு 30 நிமிடம் கழித்து முகத்தை கழுவிக் கொள்ளவும்.