முகமூடி, கையுறை… ரூ1.47 கோடி கொள்ளை! அதிர வைக்கும் வீடியோ காட்சிகள்!

 

முகமூடி, கையுறை… ரூ1.47 கோடி கொள்ளை! அதிர வைக்கும் வீடியோ காட்சிகள்!

தமிழகத்தில் தொடர் கொள்ளைகள் நடைப்பெற்று வருகின்றன என்று மக்கள் புலம்பி வரும் நேரத்தில் தமிழகத்தின் திருச்சியில் தொடர்ந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ளவைகள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. திருச்சியில் லலிதா ஜுவல்லரியில் நடந்த கொள்ளை வழக்கு தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும் தினந்தோறும் கொள்ளை சம்பவம் பற்றி புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தமிழகத்தில் தொடர் கொள்ளைகள் நடைப்பெற்று வருகின்றன என்று மக்கள் புலம்பி வரும் நேரத்தில் தமிழகத்தின் திருச்சியில் தொடர்ந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ளவைகள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. திருச்சியில் லலிதா ஜுவல்லரியில் நடந்த கொள்ளை வழக்கு தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும் தினந்தோறும் கொள்ளை சம்பவம் பற்றி புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் திருச்சி பெல் தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கியில் அதே பாணியில் முகமூடி அணிந்து கையுறையுடன் ரூ.1.47 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

cctv footage

போலீசார் தற்போது வெளியிட்டுள்ள சிசிடிவி காட்சியில், கூட்டுறவு வங்கிக்குள் கொள்ளையன் சாவகாசமாக நுழைகிறான். தனி நபராக வங்கிக்குள் நுழையும் கொள்ளையன் கையுறை, முகமூடி எல்லாம் அணிந்தப்படியே உள்ளே சென்று சூட்கேஸில் உள்ள பணத்தை எடுத்து, தான் கொண்டுச் சென்றிருக்கும் பையில் போட்டு அதன் பின்னர் பையை எடுத்துச் செல்வது தெரிகிறது. இந்த சிசிடிவியில் இருக்கும் நபரைத் தேடி போலீசார் தற்போது விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

theft

முன்னதாக, கூட்டுறவு வங்கியின் காசாளர் ரவிச்சந்திரன், அன்றைய தினம் வங்கியின் லாக்கர் சரியாக வேலை செய்யாததால், ரூ.1.47 கோடி பணத்தை சூட்கேஸில் வைத்து, தனது இருக்கைக்கு கீழே வைத்துச் சென்றுள்ளார். கொள்ளையன் மிகச் சரியாக அந்த பகுதிக்குச் சென்று அவரது இருக்கைக்கு கீழே இருக்கும் பணத்தை கொள்ளையடித்து செல்வது சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருக்கிறது. இந்த வழக்கில் காசாளர் ரவிச்சந்திரன், அவருடன் வேலை பார்க்கும் பெண் ஊழியர், அவரது கணவர் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.