முகமது ஷமி இன்; முதலில் பேட்டிங் செய்கிறது இந்தியா !!

 

முகமது ஷமி இன்; முதலில் பேட்டிங் செய்கிறது இந்தியா !!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணியும் ஆஃப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன. 

இங்கிலாந்தின் ராஸ் பவுல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். 
காயம் காரணமாக விலகிய புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக முகமது ஷமி இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். புவனேஷ்வர் குமாரை தவிர எந்த மாற்றமும் இந்திய அணியில் செய்யப்படவில்லை. 

அதே போல் ஆஃப்கானிஸ்தான் அணியில்,நூர் அலி மற்றும் தவ்லத் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஹஜ்ரத் மற்றும் அஃப்தாப் ஆகியோர் இன்றைய போட்டிக்கான ஆஃப்கானிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ளனர். 

இந்திய அணி; 
கே.எல் ராகுல்,ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, விஜய் சங்கர், தோனி, ஹர்திக் பாண்டியா, கேதர் ஜாதவ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல். 

ஆஃப்கானிஸ்தான் அணி; 
ஹசரத்துல்லாஹ் ஜாசி, குல்புதின் நபி, ரஹ்மத் ஷா, ஹஸ்மத்துல்லாஹ் ஷாஹிதி, அஸ்கார் அஃப்கான், முகமது நபி, இக்ராம் அலி கில், நஜிபுல்லாஹ் ஜர்டான், ரசீத் கான், அஃப்தாப் அலம், முஜிபுர் ரஹ்மான்.