முகமது ஷமிக்கு பிடிவாரண்ட்: ‘நீதித்துறை குறித்து பெருமைபடுகிறேன்’ ; ஷமி மனைவி கருத்து!

 

முகமது ஷமிக்கு பிடிவாரண்ட்: ‘நீதித்துறை குறித்து பெருமைபடுகிறேன்’ ; ஷமி மனைவி கருத்து!

நீதிமன்றத்தில் ஆஜராகாத கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மற்றும் அவரது சகோதர் ஹசித் அகமது இருவரையும் கைது செய்ய நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார்

நீதித்துறை குறித்து பெருமிதம் கொள்கிறேன் என இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனைவி தெரிவித்துள்ளார்

கடந்த 2018-ம் ஆண்டு, இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் நேரம் செலவழித்ததாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும்  ஷமியும், அவரது சகோதரர் ஹஸித் அகமது தன்னைத் துன்புறுத்தியதாகவும், கொலை செய்ய முயன்றதாகவும் ஷமியின் மனைவி ஹசின் ஜகான் கொல்கத்தா காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

hasin

இந்தப் புகார் தொடர்பான வழக்கு கொல்கத்தா அலிப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த  வழக்கில்  ஷமி மற்றும் அவரது சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி பலமுறை உத்தரவிட்ட போதும் இருவரும் ஆஜராகவில்லை என்று தெரிகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகாத கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மற்றும் அவரது சகோதர் ஹசித் அகமது இருவரையும் கைது செய்ய நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார்.  மேலும், அடுத்த 15 நாட்களுக்குள் இருவரும் ஆஜராகாத பட்சத்தில் அவர்களைக் கைது செய்யவும் உத்தரவிட்டார்.

hasin

இந்நிலையில், இதுகுறித்து பேசிய ஷமியின் மனைவி ஹசின் ஜஹான், ‘நீதித்துறை பற்றி பெருமைப்படுகிறேன். நான் ஒரு ஆண்டாக நீதிக்காகப் போராடுகிறேன். பெரிய கிரிக்கெட் வீரர் என்பதால் அனைவரையும் விட தான் மிகவும் சக்திவாய்ந்தவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்’ என்றார்.