முகத்தில் ஸ்ப்ரே அடித்து நடுரோட்டில் வெட்டிக் கொலை! நாடி பிடித்து உயிர் போனதைப் பார்த்த கும்பல்!

 

முகத்தில் ஸ்ப்ரே அடித்து நடுரோட்டில் வெட்டிக் கொலை! நாடி பிடித்து உயிர் போனதைப் பார்த்த கும்பல்!

தென்னக ரயில்வேயில் ஏ.ஐ.ஓ.பி.சி யூனியனில் நீண்ட காலமாக பொதுச் செயலாளராகப் பதவி வகித்தவர் ஜே.கே.புதியவன். இவர், கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டார். இவரது கொலை வழக்கை விசாரித்து வந்த போலீசார், இந்த வழக்கில், புதியவனின் கார் டிரைவர் பாஸ்கரை கைது செய்தனர். போலீசாரிடம் பிடிப்பட்ட பாஸ்கர் அளித்த வாக்குமூலத்தில் புதியவனை கொலைச் செய்ததை ஒப்புக் கொண்டார்.

தென்னக ரயில்வேயில் ஏ.ஐ.ஓ.பி.சி யூனியனில் நீண்ட காலமாக பொதுச் செயலாளராகப் பதவி வகித்தவர் ஜே.கே.புதியவன். இவர், கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டார். இவரது கொலை வழக்கை விசாரித்து வந்த போலீசார், இந்த வழக்கில், புதியவனின் கார் டிரைவர் பாஸ்கரை கைது செய்தனர். போலீசாரிடம் பிடிப்பட்ட பாஸ்கர் அளித்த வாக்குமூலத்தில் புதியவனை கொலைச் செய்ததை ஒப்புக் கொண்டார். ‘ரயில்வே பணிக்காக குறிப்பிட்ட தொகையை புதியவனிடம் கொடுத்தேன். ஆனால் அவர் சொன்னபடி எனக்கு வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. நான் அவரிடம் கொடுத்திருந்த பணத்தையும் திரும்பத் தரவில்லை. மேலும், பணத்தைத் திருப்பிக் கேட்டப்போது என்னை அவமானப்படுத்தியதால் அவரைக் கொலை செய்தேன்’ எனக் கூறியிருந்தார்.

baskar

அதன் பின்னர், சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாஸ்கர், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஜாமீனில் வெளியே  வந்து வில்லிவாக்கத்தில் வாடகைக் கார் ஓட்டி வந்தார். இந்நிலையில், நேற்றிரவு டூட்டி முடிந்ததும் காரை விட்டு விட்டு, பாஸ்கர் தனியாக வீட்டுக்கு ரோட்டில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். பலராமபுரம் 4-வது தெருவில் அவர் நடந்து சென்று கொண்டிருந்த போது, 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. கண்இமைக்கும் நேரத்தில் அந்தக் கும்பல் பாஸ்கரின் முகத்தில் மயக்க ஸ்ப்ரேவை அடித்தது. இதனால் பாஸ்கர் நிலைதடுமாறினார். பிறகு, அரிவாளால் பாஸ்கரின் முகம் மற்றும் இரண்டு கைகளிலும் சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் பாஸ்கர் அதே இடத்தில் கீழே விழுந்தார். பாஸ்கர் இறந்து விட்டாரா என்பதை உறுதி செய்ய நாடி பிடித்துப் பார்த்த பிறகு, அந்தக் கும்பல் சாவகாசமாக தப்பிச் சென்றுள்ளது. இதுகுறித்து வில்லிவாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

jj

உதவி ஆணையாளர் அகஸ்டின் ரவி சுதாகர் தலைமையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பாஸ்கரின் சடலத்தைக் கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், புதியவன் கொலைக்கு பழிக்குப் பழியாகவே பாஸ்கர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. இந்தக் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.