மீ டூ-வுக்கு எதிராக பேசிய ராணி முகர்ஜி: வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

 

மீ டூ-வுக்கு எதிராக பேசிய ராணி முகர்ஜி: வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி, ‘மீ டூ’ குறித்து சர்ச்சையான தனது கருத்தினை பொது விவாதத்தில் பேசியதற்கு நெட்டிசன்கள் கண்டன தெரிவித்து வருகின்றனர்.

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி, ‘மீ டூ’ குறித்து சர்ச்சையான தனது கருத்தினை பொது விவாதத்தில் பேசியதற்கு நெட்டிசன்கள் கண்டன தெரிவித்து வருகின்றனர்.

திரைத்துறையில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்த மீ டூ இயக்கம் ஹாலிவுட்டில் தொடங்கி பாலிவுட், கோலிவுட் வரை கடந்த சில மாதங்களாக பரபரப்பை ஏற்படுத்தியது. பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பல பிரபலங்கள் தங்களது மீ டூ அனுபவம் குறித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பெரும் புரட்சியை ஏற்படுத்தினர்.

திரை பிரபலங்கள் தரப்பில் பேசப்பட்ட மீ டூ சம்பவங்கள் பற்றிய விசாரணைகளும், விவாதங்களும் ஒருப்பக்கம் நடந்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் கலந்துக் கொண்ட ரவுண்ட் டேபிள் கான்ஃபிரன்ஸ் விவாதம் நடைபெற்றது. அதில் நடிகைகள் தீபிகா படுகோன், ஆலியா பட், தபு, டாப்ஸி, ராணி முகர்ஜி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோர் பங்கேற்றனர்.

bollywoodactress

இந்த விவாதத்தில் 2018ல் நடந்த பல சம்பவங்கள் குறித்து பேசப்பட்டது. அதில் முக்கியமானதாக பெரும் பரபரப்பை கிளப்பிய மீ டூ குறித்தும் பேசப்பட்டது. அப்போது தீபிகா, ஆலியா, அனுஷ்கா உள்ளிட்ட அனைவரும் மீ டூ-வுக்கு ஆதரவாக ஒருமித்த கருத்தை தெரிவித்தனர்.

ஆனால், இவர்களில் நடிகை ராணி முகர்ஜி மட்டும் வித்தியாசமாக கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். மீ டூ-வை தடுக்க பெண்கள், குழந்தைகள் தற்காப்பு கலையை கற்றுக் கொள்ள வேண்டும். ஆபத்து நேரும் போது பெண்கள் தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்த தீபிகா படுகோன் உள்ளிட்டோர், பெண்களை ஏன் அதுபோன்ற சூழ்நிலைக்கு ஆளாக்க வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில், மீ டூ-வின் விளைவு குறித்து அறியாமல் ஒரு பெண் குழந்தைக்கு தாயான ராணி முகர்ஜி இதுபோன்ற அசட்டுத்தனமான கருத்துக்களை கூறுவது முறையல்ல என சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.