மீ டூ புகார்லயே இது கொஞ்சம் வில்லங்கமான புகார்!

 

மீ டூ புகார்லயே இது கொஞ்சம் வில்லங்கமான புகார்!

நேரில் பார்த்த உடனே இருவருக்கும் பிடித்துவிட்டது. “வெறும் காஃபி மட்டும் போதுமா இல்ல…” என அவன் எதார்த்தமாக கேட்க, அந்த பெண்ணும் புரிந்துகொண்டு பதார்த்தமாக ஓக்கே சொல்லிவிட்டது. தள்ளுபடி ஆஃபர்னு வந்தாலே டேர்ம்ஸ் அண்ட் கன்டிஷன்ஸ் இல்லாமையா? எல்லாத்துக்கும் ஓக்கே, ஆனா ரெண்டு கன்டிஷன்ஸ்.

நம்ம ஊரு மொரட்டு சிங்கிள் பசங்க மெசெஞ்சர்லயும், வாட்சப்லேயும் தூண்டில் விரித்து, ‘இந்த வருஷமாச்சும் ஒண்ணு சிக்கிடாதா கல்யாணமோ இல்ல கச்சேரியோ நடத்திட மாட்டோமா’ன்னு வழிமேல் விழி வைத்து காத்திருக்க, கனடாவில் இருக்கும் இளைஞர்களுக்கு அது சர்வசாதாரணமாக நடந்துவிடுகிறது. இப்படித்தான் அங்க இருக்கும் டேட்டிங் ஆப் ஒன்றில் பெண் ஒருவர் அறிமுகம் ஆகியிருக்கிறார் நம்ம கட்டுரை நாயகர், கனேடிய இளைஞர் ஒருவருக்கு. “நலம், நலமறிய ஆவல், நேர்ல‌ வாங்களேன் ஒரு கப் காஃபி சாப்ட்டுக்கிட்டே பேசலாம்”னு இவன் கூப்பிட அந்த பொண்ணும் கிளம்பி வந்துவிட்டது.

me too complaint

நேரில் பார்த்த உடனே இருவருக்கும் பிடித்துவிட்டது. “வெறும் காஃபி மட்டும் போதுமா இல்ல…” என அவன் எதார்த்தமாக கேட்க, அந்த பெண்ணும் புரிந்துகொண்டு பதார்த்தமாக ஓக்கே சொல்லிவிட்டது. தள்ளுபடி ஆஃபர்னு வந்தாலே டேர்ம்ஸ் அண்ட் கன்டிஷன்ஸ் இல்லாமையா? எல்லாத்துக்கும் ஓக்கே, ஆனா ரெண்டு கன்டிஷன்ஸ். ஒண்ணு, கண்டிப்பா ஆணுறை அணியவேண்டும், ரெண்டு கண்டிப்பா இதுதான் முதலும் கடைசியும் என்றிருக்கிறாள். முதல் கண்டிஷனுக்கு அரைகுறையாக ஓக்கே சொன்னவன், இரண்டாவதுக்கு ஆசைஆசையாக ஓக்கே சொல்லியிருக்கிறேன். ப்ரேக்கப்புக்கு காரணம் தேட வேணாம் பாருங்க. ரைட்டு. எல்லாம் சுபமா ஆரம்பித்து சுகமாக முடியும்போதுதான் அந்தப்பெண்ணுக்கு தெரிகிறது அவன் ஆணுறை அணியவில்லை என்று. வந்ததே கோவம். கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்கா போக முடியும்? கோர்ட்டுக்கு போயிடுச்சு. ஆணுறை அணிவதாகக்கூறி நம்பவைத்து ஏமாற்றிவிட்டான் என நீதிபதியிடம் புகார் தெரிவிக்க, வழக்கை விசாரித்த நீதிபதி “உரிய அனுமதி இல்லாமல் உறவு கொண்டது பாலியல் வன்முறையாகும்” என்று சொல்லி நம்ம கட்டுரை நாயகனை தூக்கி உள்ளே போட்டுவிட்டது. உசாரய்யா உசாரு!