மீரா மிதுனை வச்சு செஞ்ச வனிதா விஜயகுமார்! சூடுபிடிக்கும் பிக்பாஸ் களம்!

 

மீரா மிதுனை வச்சு செஞ்ச வனிதா விஜயகுமார்! சூடுபிடிக்கும் பிக்பாஸ் களம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது நாளுக்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது நாளுக்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு நாள் கடந்த நிலையில், இனிமேல் தான் ஆட்டம் சுடும் பிடிக்கும் போல் தெரிகிறது. ஏனென்றால் நேற்று 16வது போட்டியாளராக நுழைந்த மீரா மிதுனை, அபியும், சாக்ஷியும் சேர்ந்து வெறுத்தனர்.பின்பு பிக்பாஸ் வீட்டில் தன்னை சேர்த்து கொள்ளும்படி ஒவ்வொருவரிடமும் மீரா கேட்க அபிராமி மற்றும் சாக்ஷி இருவரும் அவரிடம் முரண்பாடாக நடந்துகொண்டனர். அதை புரிந்து கொண்ட மீரா, எனக்கும் ஒரு நேரம் வரும் எனப் பதிலளித்தார். 

இதன்மூலம் பிக் பாஸ் திட்டம் போட்டுத் தான் மீராவை இறக்கியுள்ளார் என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. இந்த நிலையில் இன்றைக்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் மீரா உனக்கு என்னிடம் பேச விருப்பம் இல்லை என்றல் உன்னுடைய ‘attitude’ என்கிட்ட காட்டாதே என்று கூற, அதற்கு பதிலளித்த அபி இனிமேல் என்கிட்ட பேசாத என்று நக்கலாகச் சொல்லி அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்கிறார்.  

உடனே இந்த வார தலைவியான வனிதா, சம்பவ இடத்திற்கு வந்து மீராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அப்போது ‘என்னை நீ அமைதியாக இருக்கும் படி நீ சொல்ல தேவையில்லை’ என்று கடுமையாக பேசியுள்ளார். இதிலிருந்து ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் மீரா மிதுனை டார்கெட் செய்வது போல் தெரிகிறது. மேலும் இன்றைய நாள் கண்டிப்பாக பெரும் மோதலுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.