மீராவுக்கு இன்றைக்கு ஒரு குறும்படம் பார்சல்…!

 

மீராவுக்கு இன்றைக்கு ஒரு குறும்படம் பார்சல்…!

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி இன்றோடு 34 நாட்கள் ஆகியுள்ளது. வார இறுதி நாள் என்பதால் கமல்ஹாசன் ஹவுஸ் மேட்ஸ் அனைவரிடமும் உரையாடுவார். அப்போது அதில் வாரம் முழுக்க நடந்த நிகழ்வுகள் குறித்து அவர்களிடம் கேள்வி கேட்பது, சண்டையைச் சமாதானம் செய்து வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவர். அதைத்தொடர்ந்து ஞாயிற்று கிழமை வீட்டிலிருந்து ஒருவரை வெளியேற்றும் படலம் நடைபெறும். இன்றைய  முதல் புரோமோவில் மீராவை தாக்கி கமல் பேசியிருந்ததை ஏற்கனவே பார்த்தோம்… 

தற்போது இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் நேரடியாகச் சேரன் என்று அழைத்த கமல், ‘என்ன நடந்தது என்பதை நாங்க பார்த்தோம் அவங்களும் சொன்னாங்க. மீரா உங்களக்கு கிடைக்கப்பெற்ற அநீதி என்ன? யாரை வேண்டுமானாலும் குற்றம் சொல்லலாம். ஆனால் அது போன்ற ஒரு குற்றச்சாட்டு வரவேயில்லை. எங்க மேல ஒரு நம்பிக்கை வெச்சிருந்திங்க, அந்த நம்பிக்கை வீண்  போகக்கூடாது.  உங்களுக்கு வீடியோ எங்களுக்குக் குறும்படம்’ என்று கூறியுள்ளார். 

ஆகையால் இந்த குறும்படம் மூலம் மீராவின் முகத்திரை இன்று கிழிந்துவிடும் என்றே எதிர்பாக்கப்டுகிறது. மேலும் இவர் தான் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறுவர் என்றும் ஒரு ஒரு தகவல் வெளியாகியுள்ளது.