மீன ராசி குருபெயர்ச்சி பலன்கள் (2018-2019)

 

மீன ராசி குருபெயர்ச்சி பலன்கள் (2018-2019)

துலாம் ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான்  உங்கள் ராசிக்கு 9 ஆம் இடமாகிய விருச்சிகத்தில் பெயர்ச்சியாக இருப்பதால் வரக்கூடிய குரு பெயர்ச்சி எவ்வாறான பலன்களை தரும் என்பதைபற்றி இந்த பதிவில் மிகவும் விரிவாக பார்போம்.

மீன ராசிக்கு அதிபதி குருவாக இருப்பதால் உண்மைக்கும், நேர்மைக்கும் மட்டுமே பயப்படுவீர்கள் பெரும்பாலான மீன ராசி நேயர்கள் ஆசிரியராக இருப்பார்கள். அல்லது பண்டிதர்களாக இருப்பார்கள் .இவர்களுக்கு இயற்கையிலேயே கடவுளின் அருளினை பெற்றவர்கள். நட்பு பாராட்டுவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே.

உங்கள் ராசிக்கும் மற்றும் 10 க்கு அதிபதியான குரு பகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 8 ஆம் இடத்தில் இருந்து கொண்டு பல்வேறு இன்னல்களை கொடுத்து வந்தார்.

குரு பகவான் வருகின்ற அக்டோபர் மாதம்  4 ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 9 ஆம் இடமாகிய விருச்சிகத்தில் சஞ்சரிக்க உள்ளதால் நல்ல ஆரோக்கியம் ,தாராள தனவரவு ,சொத்துக்கள் வாங்கும் யோகம் ,குடும்பத்தில் ஒற்றுமை,எடுக்கும் முயற்சிகளில் வெற்றி,சுபகாரியங்கள் கைகூடும் அமைப்பு,தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம்,உத்யோகத்தில் உயர்வுகள் உண்டாகும்.

குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து உங்களது ராசியையே பார்ப்பதால் எடுத்த காரியத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். சமுதாயத்தில் உயர் பதவிகளில் இருப்பவர்களுடன் உங்களுக்கு நட்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் காலகட்டம் இதுவாகும்

குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து உங்களது ராசிக்கு 3 ஆம் இடமான தைரிய ஸ்தானத்தினை குரு பார்ப்பதால் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிடைக்கும். மற்றவர்களிடம் இருந்து தனித்துவம் பெற்று மக்கள் இடத்தில் செல்வாக்கும்,சொல்வாக்கும் பெறுவீர்கள்.

குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து உங்களது ராசிக்கு 5 ஆம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தினை குரு பார்ப்பதால், குடும்பத்தில் நீண்ட நாட்களாக ஏற்பட்டு வந்த சன்டை, சச்சரவுகள் தீரும் குழந்தைகளால் மேன்மையான பலன்கள் ஏற்படும்.

meenam maanavargal

மாணவர்கள்: மீன ராசி மாணவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மிகுந்த நன்மைகள் நடைபெறும் குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது.

meenam pengal

பெண்கள்: மீன ராசி பெண்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சகல நன்மைகளையும் தருகின்ற குரு பெயர்ச்சி விளங்குகிறது .உடல் நலத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் நீங்கும்.

meenam kalaingarkal

கலைஞர்கள் : மீன ராசி கலைத்துறையினருக்கு ,வருமானம் அதிகமாக இருக்கும்.எந்த ஒரு காரியத்திலும் நிதானமாக செயல்படுவது மிகுந்த நன்மை பயக்கும்.

meenam arsiyal

அரசியல்வாதிகள்: மீன ராசி அரசியல்வாதிகளுக்கு மிகவும் ஏற்றமான காலகட்டம் இதுவாகும். கூட்டனி கட்சியை தேர்வு செய்வதில் உங்களின் புத்திசாலித்தனம் மேலோங்கும்.

meenam vivasayam

விவசாயிகள்  : மீன ராசி விவசாயிகள் விவசாயம் சார்ந்த தொழிலில் அதிக நன்மைகள் உண்டாக்கும்.விவசாயத்திற்கு தேவையான நீர் பாசன வசதிகள் கிடைக்கும். விவசாய கடன் ரத்தாகும்.

meenam parika

பரிகாரம்: மீன ராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ ரங்கம் ரெங்கநாதரையும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியையும் தரிசனம் செய்துவர உங்கள் வாழ்வில் சகல செல்வங்களையும் பெற்று சிறப்புடன் வாழலாம்.