மீன் மார்கெட்டுகள் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் செயல்பட அனுமதி!

 

மீன் மார்கெட்டுகள் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் செயல்பட அனுமதி!

சிறு, குறு தொழில்கள் குறைந்த வேலையாட்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ள நிலையில் நேற்று மட்டும் புதிதாக 527 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக சென்னையில் மட்டுமே 1724 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும்  சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதே போல சிறு, குறு தொழில்கள் குறைந்த வேலையாட்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

ttn

அந்த வகையில் கோவையில் மொத்த மற்றும் சில்லறை வியாபார மீன் மார்கெட்டை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய மீன்மார்க்கெட் சங்க பொருளாளர், ‘ஊரடங்கு அமலில் இருந்ததால் கடந்த 45 நாட்களாக மீன் வியாபரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது மாவட்ட நிர்வாகம் மீன் மார்க்கெட்டை திறந்து கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியிருக்கிறது. தினமும் இரண்டு முறை கிருமி நாசினி, சமூக விலகல் என அனைத்தையும் முறையாக பின்பற்றி வருகிறோம் என்று கூறினார். மேலும், தற்போது தூத்துக்குடி உள்ளிட்ட சில இடங்களில் இருந்து மட்டுமே மீன் வருவதால்,  விலை அதிகமாக இருக்கிறது  என்றும் அனைத்து இடங்களில் இருந்தும் மீன் வரத்தொடங்கி விட்டால் விலை குறைந்து விடும் என்றும் கூறினார்.