மீனாட்சி அம்மன் கோவிலில் பாதாள சிறை கண்டுபிடிப்பு!

மீனாட்சி அம்மன் கோவிலில் பாதாள சிறை கண்டுபிடிப்பு!

மீனாட்சி அம்மன் கோவில் அருகே வாகன பார்க்கிங் பணிக்காக தோண்டிய பள்ளத்தில் அந்த காலத்தில் தண்டனைக்காக பயன்படுத்தப்பட்ட பழமையான சிறை கண்டுப்பிடிக்கப்பட்டது.

மீனாட்சி அம்மன் கோவில் அருகே வாகன பார்க்கிங் பணிக்காக தோண்டிய பள்ளத்தில் அந்த காலத்தில் தண்டனைக்காக பயன்படுத்தப்பட்ட பழமையான சிறை கண்டுப்பிடிக்கப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார் பார்க்கிங் பணிக்காக 30 அடி அளவில் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. பணி நடைபெற்று கொண்டிருக்கும்போது பத்தடி நீளம் கொண்ட கருங்கல் தூண்கள் வெளிவந்துள்ளது. தற்போது பார்க்கிங் அமைக்கும் மேற்பகுதியில் ராணி மங்கம்மாள் காலத்தில் சிறைச்சாலை இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் இது பாதாள சிறையாக இருக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே மாநகரட்சியின் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய பள்ளம் தோண்டிய போது மீனாட்சியம்மன் கோவிலுக்கும் , கூடல்பெருமாள் கோவிலுக்கும் இடையே இருந்த செங்கல் சுண்ணாம்பு கட்டிடத்தால் ஆன சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது , அதனை மாநகராட்சி ஊழியர்கள் சேதப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.