மீனம்பாக்கத்திலிருந்து 60 கிலோ மீட்டரில் இன்னொரு ஏர்போர்ட்  அமையவிருக்கிறது !

மீனம்பாக்கத்திலிருந்து 60 கிலோ மீட்டரில் இன்னொரு ஏர்போர்ட்  அமையவிருக்கிறது !

சென்னை மீனம்பாக்கத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச விமான நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல் காரணமாக பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்லமுடியவில்லை என நீண்ட நாள் புகாராக இருந்துள்ளது. இந்நிலையில் மீனம்பாக்கத்தை ஒட்டி உள்ள பகுதியில் கிரின் பீல்டு ஏர்போர்ட்’ எனும் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் சில கிராமங்கள் தேர்வான நிலையில் பலத்த எதிர்ப்பு வந்ததால், காஞ்சிபுரம் தாலுகாவில் 6 வருவாய் கிராமங்கள், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில், 6 வருவாய் கிராமங்கள் என மொத்தம், 12 வருவாய் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. 

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் அருகே புதிய விமான நிலையத்தற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை வருவாய்த்துறையினர் தொடங்கி உள்ளனர். இதற்கு 12 வருவாய் கிராமங்களில் 4,700 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் பணியில் வருவாய்துறையினர்ஈடுபட்டு வருகின்றனர்.

Chennai Airport

சென்னை மீனம்பாக்கத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச விமான நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல் காரணமாக பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்லமுடியவில்லை என நீண்ட நாள் புகாராக இருந்துள்ளது. இந்நிலையில் மீனம்பாக்கத்தை ஒட்டி உள்ள பகுதியில் கிரின் பீல்டு ஏர்போர்ட்’ எனும் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் சில கிராமங்கள் தேர்வான நிலையில் பலத்த எதிர்ப்பு வந்ததால், காஞ்சிபுரம் தாலுகாவில் 6 வருவாய் கிராமங்கள், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில், 6 வருவாய் கிராமங்கள் என மொத்தம், 12 வருவாய் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. 
இதற்காக செங்கல்பட்டு மாவட்டம் பரந்தூர் கிராமம் அருகே 4,700 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். அதாவது ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவுக்குட்பட்ட எடையார்பாக்கம், குணகரம்பாக்கம், மகாதேவிமங்கலம், அக்கமாபுரம், சிங்கல்பாடி, ஏகனாபுரம் கிராமங்களும், காஞ்சிபுரம் தாலுகாவுக்குட்பட், வளத்துார், பரந்துார், நெல்வாய், தண்டலம், பொடவூர், மடப்புரம் கிராமங்களிலும் நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன.

Chennai- Airport

ஆனால் பரந்தூரில் விமான நிலையம் அமைந்தால் சென்னையில் இருந்து சுமார் 60 கிமீ தூரம் செல்ல வேண்டி வரும். அதற்கு ஒன்றரை மணிநேரம் ஆகும்.
ஆண்டுக்கு 1.50 கோடி பயணிகளை மட்டுமே கையாளும் திறன் கொண்ட மீனாம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்த ஆண்டு 2.20 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். இதனால் பயணிகளுக்கு அதிக சிரமம் ஏற்பட்டுள்ளது.