மீண்டெழுவாரா டி.டி.வி..? புன்னகை நாயகனின் ’புண்பட’ வைக்கும் மறுபக்கம்..!

 

மீண்டெழுவாரா டி.டி.வி..? புன்னகை நாயகனின் ’புண்பட’ வைக்கும் மறுபக்கம்..!

டி.டி.வி.தினகரனுக்கு ஆர்.கே.நகர் தேர்தல் பல்கலை கற்றுத்தந்தாலும், இந்தத் தேர்தல் அவருக்கு பாலபாடம் கூட போதிக்கவில்லை. அதிரடியாய் இருந்தவருக்கு பேரிடியாய் அமைந்து விட்டது இந்தத் தேர்தல்.

டி.டி.வி.தினகரனுக்கு ஆர்.கே.நகர் தேர்தல் பல்கலை கற்றுத்தந்தாலும், இந்தத் தேர்தல் அவருக்கு பாலபாடம் கூட போதிக்கவில்லை. அதிரடியாய் இருந்தவருக்கு பேரிடியாய் அமைந்து விட்டது இந்தத் தேர்தல். TTV

எழுச்சிநாயகனாய் பிம்பத்தை ஏற்படுத்தியவர், சுக்கு நூறாய் உடைந்து போய் மீண்டும் எழுவாரா? என்கிற கேள்வியை எழுப்பி இருக்கிறது. ஆனாலும், புன்னகை நாயகனின் பேச்சு அமமுகவினரை புண்பட வைத்திருக்கிறது. 

தேர்தலில் தோற்றாலும் ஜெயித்தாலும் தொண்டர்களை உற்சாகப்படுத்தி தங்கள் தலைமையின் இருக்க வைப்பதுதான் ஒரு கட்சி தலைமையின் பண்பு. ஆனால் டி.டி.தினகரன் ’’இருந்தால் கட்சியில் இருங்கள். உங்களை இங்கேயே இருங்கள் என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது’ என்று பேசியது தான் அமமுகவில் இருப்பவர்களை திகைக்க வைத்திருக்கிறது.TTV

 அதை கேட்ட நிர்வாகிகள்,  இதை முதலிலேயே சொல்லி இருந்தால் நாங்கள் ஏன் அதிமுகவில்  இருந்து இங்கே வந்து இன்னல் பட வேண்டும். கடன்காரர்களாகவும் ஆகிவிட்டோம். இப்போது போனால் போ என்று சொல்வது என்ன நியாயம். 

என்ன பிரச்னை என்று தொண்டர்களிடம் கேட்டு அதை நிவர்த்தி செய்வதுதான் தலைமையின் பண்பு. சசிகலா சிறைக்கு போகும்போது என்ன சொல்லிட்டு போனார்? எல்லோரும் ஒற்றுமையாக இருங்க. நான் ஜெயிலுக்கு போறதனால நீங்க சோர்வடையாதீங்க. இன்னும் கட்சி பணியில தீவிரமாக இருங்க’’ என்று சொல்லிவிட்டுத்தான் சென்றார்.TTV

 தான் ஜெயிலுக்கு போகிறோம் என்று எண்ணாமல் விரும்பிய கட்சிக்கு போங்க என்று யாருக்கும் சொல்லவில்லை. டி.டி.வி.தினகரன், சசிகலாவுக்கு எதிர்கருத்தையே பேசி வருகிறார். இந்நிலை நீடித்தால் கட்சியில் அவர் மட்டும்தான் இருப்பார் என்று கட்சி தொண்டர்கள் வேதனையுடன் பேசிக் கொள்கிறார்கள்.