மீண்டும் 96 பட இயக்குநரோடு கைகோர்த்த விஜய் சேதுபதி!

 

மீண்டும் 96 பட இயக்குநரோடு கைகோர்த்த விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தில் 96 பட இயக்குநர் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

மீண்டும் 96 பட இயக்குநரோடு கைகோர்த்த விஜய் சேதுபதி!

சென்னை: விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தில் 96 பட இயக்குநர் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

தமிழ் சினிமாவில் ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்து வருபவர் விஜய் சேதுபதி. அந்த வகையில் தற்போது துக்ளக் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். அதிதிராவ் ஹீரோயின்னாக நடிக்க பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். 

இந்த நிலையில் இதில் 96 படம் மூலமாக இயக்குநராக அறிமுகமான பிரேம்குமார் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கோவிந்த் வசந்தா இசை அமைப்பாளராக இணைந்திருக்கிறார். 

இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு இன்று சென்னையில் மிகப் பிரம்மாண்டமாகத் துவங்கியுள்ளது. பூஜையில், விஜய் சேதுபதி, அதிதிராவ், பார்த்திபன், காயத்ரி, சமுத்திரக்கனி, பகவதி பெருமாள், கருணாகரன், ராஜ்குமார், தயாரிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.