மீண்டும் வெள்ளக்காடாய் மாறிய மும்பை! ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

மீண்டும் வெள்ளக்காடாய் மாறிய மும்பை! ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் வடமேற்கு வங்கக் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து ரெட் அலர்ட் எச்சரிக்கை வி‌டுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் வடமேற்கு வங்கக் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து ரெட் அலர்ட் எச்சரிக்கை வி‌டுக்கப்பட்டுள்ளது.

மும்பையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அனைத்துப் பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து  தானே, மலாட், தாஷிரா, ராய்காட் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

rain

தொடர் கனமழையால் போக்குவரத்து வழிதடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வேலைக்குச் செல்வோர் கடும்‌ சிரமத்துக்கிடையே அலுவலகம் சென்றனர். சாலைகளின் பல பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.