மீண்டும் வெற்றிமாறனுடன் இணையும் தனுஷ்!

 

மீண்டும் வெற்றிமாறனுடன் இணையும் தனுஷ்!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிதாக ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிதாக ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

’பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘வடசென்னை’ வரிசையில் 4வது முறையாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது கூட்டணியில் உருவான ‘வடசென்னை’ படத்தின் ப்ரஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது.

vadachennai

இதில் பங்கேற்று பேசிய நடிகர் தனுஷ், வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை 2’ திரைப்படம் அல்லாமல் புதிய படத்தில் நடிக்கவிருப்பதாகவும், விரைவில் அதன் ஷூட்டிங் துவங்கும் என்றும் தெரிவித்துள்ளார். ’வட சென்னை’ திரைப்படம் வரும் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்.17ம் தேதி உலகமெங்கும் ரிலீசாகவுள்ளது.

இப்படத்தின் அடுத்த பாகத்திற்கான 20% பணிகள் நிறைவடைந்திருப்பதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் 3 பாகங்களாக வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.