மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ராகுலின் குடியுரிமை பிரச்னை; உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்!

 

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ராகுலின் குடியுரிமை பிரச்னை; உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்!

காங்கிரஸ் கட்சி குறித்தும், அதன் மேலிடம் குறித்தும் அவ்வப்போது பல புகார்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்புபவர் சுப்பிரமணியன் சுவாமி

புதுதில்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை தொடர்பான விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காங்கிரஸ் கட்சி குறித்தும், அதன் மேலிடம் குறித்தும் அவ்வப்போது பல புகார்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்புபவர் சுப்பிரமணியன் சுவாமி. அதன்படி, பிரிட்டனில் நிறுவனம் நடத்தி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல், பிரிட்டன் குடிமகன் என அவரே கூறியுள்ளார் என சுவாமி கடந்த 2015-ஆம் ஆண்டு தெரிவித்து சர்ச்சையை கிளப்பினார். மேலும், இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனவே, ராகுலின் எம்.பி., பதவியை பறிக்க வேண்டும் என பிரதமருக்கு அப்போது அவர் கடிதமும் எழுதியிருந்தார்.

subramanian swamy

இதனை மறுத்த காங்கிரஸ், சுவாமி கூறுவது போன்று ராகுல் காந்தியிடம் பிரிட்டிஷ் குடியுரிமை இல்லை என்றது. எனினும், இதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக சுவாமி உறுதிபட கூறி வருகிறார்.

இந்த நிலையில், ராகுல் காந்திக்கு இந்தியா மட்டுமின்றி இங்கிலாந்திலும் குடியுரிமை உள்ளது என மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சுப்பிரமணியன் சுவாமி புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 2003-ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் பேக்ஆப்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனம்; எண்-51, சவுத்கேட் ஸ்ட்ரீட், வின்செஸ்டர், ஹாம்ப்ஷேர் என்ற முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ராகுல் காந்தி இங்கிலாந்து குடிமகன் என்று குறிப்பிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான, ராகுல் அந்நிறுவனத்தின் 83 சதவீத பங்குகளை வைத்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.

rahulgandhi

இதையடுத்து, இரட்டை குடியுரிமை தொடர்பாக 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என ராகுலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், மக்களவை தேர்தலில் தோல்வி பயம் காரணமாக மத்திய அரசு இதுபோன்று நடந்து கொள்வதாக பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.