“மீண்டும் ரஜினி படத்தில் பணிபுரிகிறேன்” – “பேட்ட” பிரபலம் மகிழ்ச்சி!

 

“மீண்டும் ரஜினி படத்தில் பணிபுரிகிறேன்” – “பேட்ட” பிரபலம் மகிழ்ச்சி!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் நிஹாரிக்கா பாசின் ஒப்பந்தமாகியுள்ளார். “பேட்ட” படத்திலும் இவரே ஆடை வடிவமைப்பாளர் ஆவார்.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் பிரபல ஆடை   வடிவமைப்பாளர் நிஹாரிக்கா பாசின் ஒப்பந்தமாகியுள்ளார். “பேட்ட” படத்திலும் இவரே ஆடை வடிவமைப்பாளர் ஆவார்.

சூப்பர் ஸ்டாரை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய “பேட்ட” படத்தில் ரஜினியை பழைய ரஜினியாக பார்த்தோம் என்று அவரது ரசிகர்கள் கூறி மகிழ்ந்தனர். அதற்கு முக்கிய காரணமாக படத்தில் ரஜினியின் ஆடைகள் மிகவும் பிரமாதமாக இருந்ததும் ஒன்று.

இந்நிலையில், அப்படத்தின் ஆடை வடிவமைப்பாளரான நிஹாரிக்கா பாசினே “தலைவர் 166” படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றவுள்ளார். இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வடிவமைப்பாளர் நிஹாரிக்கா பாசின், அதில், கபாலி படம் விளம்பரத்துக்காக பயன்படுத்தப்பட்ட விமானத்தின் போட்டோவை பதிவிட்டு, இந்த விமானத்தில் கோவா செல்வதாக குறிப்பிட்டு, முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும்  படத்தில் மீண்டும் பணியாற்றுவதில் மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார்.

பேட்ட படத்தை போலவே..இல்லை..இல்லை அதுக்கும் மேலே, “தலைவர் 166” படத்தில் ரஜினியின் ஆடைகள் மிகவும் ஸ்டைல் ஆக இருக்க வேண்டும் என்பதே ரஜினி ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

NiharikaBhasinKhan

ஏ.ஆர்.முருதாஸ் இயக்கவுள்ள இப்படத்தில் அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படம் தொடர்பான பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.