மீண்டும் மிரட்ட வந்தார் சிட்டி; சூப்பர் ஸ்டாரின் :”2.0″ டீசர் வெளியானது

 

மீண்டும் மிரட்ட வந்தார் சிட்டி; சூப்பர் ஸ்டாரின் :”2.0″ டீசர் வெளியானது

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் “2.0” திரைப்படத்தின் டீசர் வெளியானது.

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும்  திரைப்படம் 2.0. இவர்கள் கூட்டணியில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி வசூல் வேட்டை நடத்திய எந்திரன் திரைப்படத்தின் 2-ம் பாகமாக உருவாகி இருக்கும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

 

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று அறிவிகக்ப்பட்டது. அதன்படி, இன்று காலை 9 மணி அளவில் 2.0 திரைப்படத்தின் டீசர் வெளியானது. தமிழகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் 3டியில் உருவாகி இருக்கும் டீசரும், 5,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 2டியில் உருவாகி இருக்கும் டீசரும் வெளியிடப்பட்டன. இந்த டீசரை தற்போது ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர். 2.0 திரைப்படம் நவம்பர் 29-ம் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.