மீண்டும் மாற்றப்பட்டது சூர்யாவின் காப்பான் பட ரிலீஸ் தேதி! 

 

மீண்டும் மாற்றப்பட்டது சூர்யாவின் காப்பான் பட ரிலீஸ் தேதி! 

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

நடிகர் சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காப்பான்’. லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ஹீரோயினாக சயீஷா நடித்துள்ளார். அவர்களுடன் இணைந்து மோகன்லால், பொமன் இரானி, ஆர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

 சூர்யாவின் 37வது படமான இதில் அவர் பிரதமரைப் பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக நடித்துள்ளார். இந்த நிலையில் இப்படம் வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி ரிலீசாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஆகஸ்ட் 30-ந் தேதிக்கு மாற்றப்பட்டது. தற்போது அது மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் அடுத்த மாதம் செப்டம்பர் 20-ந் தேதி ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  

இதை லைகா புரொடக்‌ஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இதே நாளில்’காப்பான்’ தெலுங்கில் ‘பந்தோபஸ்த்’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.