மீண்டும் மகாராஷ்டிர துணை முதல்வராகிறார் அஜித் பவார்! 

 

மீண்டும் மகாராஷ்டிர துணை முதல்வராகிறார் அஜித் பவார்! 

மகாராஷ்டிரா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி 4 நாட்கள் துணை முதல்வராக பதவி வகித்து பின் ராஜினாமா செய்த அஜித் பவார் மீண்டும் துணை முதல்வராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி 4 நாட்கள் துணை முதல்வராக பதவி வகித்து பின் ராஜினாமா செய்த அஜித் பவார் மீண்டும் துணை முதல்வராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையே கூட்டணி முடிவாகிவிட்டதாகவும் சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே ஐந்து ஆண்டுகள் முதல்வராக நீடிப்பார் என்றும் பேசப்பட்டுவந்தது. ஆனால் ஒரே இரவில் அனைத்தும் மாற்றமடைந்துமகாராஷ்டிராவில் அமல்படுத்தப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டது. அதன்பின் சிறிது நேரத்திற்குள் பாரதிய ஜனதா கட்சியின் தேவேந்திர பட்னாவிஸ் இரண்டாவது முறையாக முதல்வராக பதவி ஏற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராக பொறுப்பேற்றார். யாரும் எதிர்பாராத வகையில் பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் இணைந்தது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் நாடாளுமன்றத்தில் நம்பிகை வாக்கெடுப்பை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பெரும்பான்மையை நிருபிக்க முடியாது என்பதை உணர்ந்த பட்னாவிஸும், அஜித்பவாரும் நீதிமன்றம் உத்தரவிட்ட சில நிமிடங்களிலேயே பதவியிலிருந்து விலகினர். 

ajit pawar

இந்நிலையில் இன்று மகாராஷ்டிரா முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்கவுள்ள நிலையில் துணை முதலமைச்சர் பதவி தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவாருக்கு அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவோ, சிவசேனாவோ, மாநிலத்தை ஆளுவது யாராக இருந்தாலும் நம்ம துணை முதலமைச்சரான சரி என்ற மன நிம்மதியுடன் அஜித் பவார் இருக்கிறார்.