மீண்டும்  ப்ளே ஸ்டோருக்கு வந்த டிக் டோக்: பயனாளர்கள் மகிழ்ச்சி!

 

மீண்டும்  ப்ளே ஸ்டோருக்கு வந்த டிக் டோக்: பயனாளர்கள் மகிழ்ச்சி!

டிக் டோக் மீதான தடை நீக்கப்பட்டதின் பேரில் டிக் டோக்கை  ப்ளே ஸ்டோர் மீண்டும் கொண்டுவந்துள்ளது

டிக் டோக் மீதான தடை நீக்கப்பட்டதின் பேரில் டிக் டோக்கை  ப்ளே ஸ்டோர் மீண்டும் கொண்டுவந்துள்ளது

டிக் டோக் ஆப்பில் பெண்கள் பதிவிடும் வீடியோக்களை சிலர் மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிடுவதால், பல பெண்கள் தற்கொலை கொள்வதால், சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படும் நிலையும் உருவாகி உள்ளது. இதுபோன்ற காரணங்களால் இந்தோனேசியாவில் டிக் டோக்  செயலி தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இளைஞர்களின் நலன் கருதி டிக் டோக் செயலியைத் தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

madurai hc

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, டிக் டோக் செயலியை தரவிறக்கம் செய்வதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது. இதனிடையே, டிக் டோக்  செயலி தடைக்கு எதிராக சீன நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கின் வாதத்தின் போது, தங்களிடம் எந்த கருத்தும் கேட்காமலேயே டிக் டோக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக அந்த நிறுவனத்தின் தரப்பில் வாதிடப்பட்டது.  இதை தொடர்ந்து டிக் டோக்  செயலியின் மீதான மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென்றும் தவறும் பட்சத்தில் டிக் டோக் மீதான தடை தளர்ந்ததாகக் கருதப்படும்’ என்றும் உத்தரவிடப்பட்டது. 

sc

இதை தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 24 ஆம் தேதி  நடைபெற்றது. அப்போது, தவறான நோக்கத்திலோ அல்லது ஆபாசமாகவோ வீடியோ பதிந்தால் அடுத்த 15 நிமிடங்களில் வீடியோ நீக்கம் செய்யப்படும். ஏற்கனவே, சர்ச்சைக்குரிய சுமார் 6 மில்லியன் வீடியோக்கள் செயலியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக டிக் டோக்  தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, சிறுவர், சிறுமியர், பெண்களின் ஆபாச வீடியோக்களை டிக் டோக்-கில் வெளியிடக் கூடாது. சமூக சீர்கேட்டை உருவாக்கம் வீடியோக்களை பதிவிறக்கம் செய்யக்கூடாது. சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டால் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் டிக் டாக் செயலிக்கான தடையை நீக்கி  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

tikntok

இந்நிலையில்  தடை நீக்கப்பட்டதால் டிக் டோக்கை தரவிறக்கம் செய்யும் வசதியை ப்ளே ஸ்டோர் மீண்டும் கொண்டுவந்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் டிக் டோக்கை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.