மீண்டும் புல்பார்மில் மாருதி சுசுகி…. கடந்த சில தினங்களில் 5 ஆயிரம் கார்கள் விற்பனை….

 

மீண்டும் புல்பார்மில் மாருதி சுசுகி….  கடந்த சில தினங்களில் 5 ஆயிரம் கார்கள் விற்பனை….

லாக்டவுன் விதிமுறைகள் தளர்த்தப்பட்டதையடுத்து, மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கடந்த சில தினங்களில் மட்டும் 5 ஆயிரம் கார்களுக்கு மேல் விற்பனை செய்துள்ளது.

நாட்டின் பெரிய பயணிகள் கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா 1964 டவுன்கள் மற்றும் நகரங்களில் மொத்தம் 3,086 ஷோரூம்கள் கொண்ட விற்பனை நெட்வொர்க்கை கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு நடைமுறைப்படுத்திய முதல் 2 கட்ட லாக்டவுன் காலத்தில் (மொத்தம் 40 நாட்கள்) அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர்த்து மற்ற கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் மாருதி சுசுகியின் அனைத்து ஷோரூம்கள் அடைக்கப்பட்டன. மாருதி நிறுவனம் உள்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு கார் கூட விற்பனை செய்யவில்லை.

மாருதி சுசுகி ஷோரூம்கள்

இந்நிலையில் கடந்த 4ம் தேதி முதல் லாக்டவுன் கட்டுப்பாடுகளை தளர்த்தி அத்தியாவசியமில்லாத கடைகள் மற்றும் அலுவலகங்களை திறந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. இதனையடுத்து மாருதி சுசுகி தனது ஷோரூம்களை திறந்து விற்பனையை தொடங்கியது. கடந்த சில தினங்களில் மட்டும் 5 ஆயிரம் கார்களுக்கு மேல் விற்பனை செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கெனிச்சி யுகவா கூறியதாவது:

மாருதி சுசுகி

கார் வாங்கும் அனுபவத்தை முற்றிலும் பாதுகாப்பதானது என்பதை உறுதி செய்ய விரிவான விதிமுறைகளை நிறுவனம் செயல்படுத்தியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் விதிமுறைகளின் அடிப்படையில் இந்த விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எங்களது வாடிக்கையாளர்களை ஆன்லைனில் கார் தேர்வு மற்றும் புக் செய்வதை ஊக்குவிக்கிறோம். புதிய காரை ஹோம் டெலிவரி செய்யும் வசதியை பயன்படுத்தி கொள்ளவும் சொல்கிறோம். தற்போது 1,350க்கும் மேற்பட்ட ஷோரூம்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட ட்ரூ வேல்யு நிலையங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளது. கட்டுபடுத்துதல் மண்டலங்களில் மற்றும் எந்தவொரு லோக்கல் கட்டுபாடுகள் இல்லாத பகுதிகளில் உள்ள எஞ்சிய ஷோரூம்கள் சரியான நேரத்தில் திறக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.