மீண்டும் பிரதமராகிறார் மோடி: அதிர வைக்கும் சர்வே முடிவு!

 

மீண்டும் பிரதமராகிறார் மோடி: அதிர வைக்கும் சர்வே முடிவு!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இந்தச் சூழலில் நடைபெற்றால் பாஜக 281 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் எனவும் மோடி இரண்டாவது முறையாகப் பிரதமராக வருவார் எனப் பரபரப்பு கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இந்தச் சூழலில் நடைபெற்றால் பாஜக 281 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் எனவும் மோடி இரண்டாவது முறையாகப் பிரதமராக வருவார் எனப் பரபரப்பு கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏற மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல், மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது. இது தவிர பாஜக-வை வீழ்த்தும் நோக்கில் மூன்றாவது அணியும் தயாராகி வருகிறது.

modi

இதில் இரு பெரும் தேசிய கட்சிகளான பா.ஜ., காங். ஆகியன கூட்டணியை உறுதி செய்யாத நிலையில் தற்போது லோக்சபாவிற்கு இன்றே தேர்தல் நடந்தால் யார் ஆட்சியைப் பிடிப்பார் என்பது குறித்து இந்தியா டி.வி. மற்றும் சி.என்.எக்ஸ் இணைந்து கருத்து கணிப்பினை மாநிலங்கள் வாரியாக வெளியிட்டுள்ளது.

modi

அதன்படி தற்போதைய பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 281 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், காங்.தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 124 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் மற்றவை 138 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் அந்தக் கருத்து கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. 

அதன் படி பார்த்தால் மீண்டும் பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் எனவும், நரேந்திர மோடியே இரண்டாவதாகப் பிரதமர் பதவி வகிப்பார் என்றும் கூறப்படுகிறது.