மீண்டும் பிரச்சினையில் சிக்கிய சிவகார்த்திகேயன்: இந்த முறை என்னனு நீங்களே பாருங்க!

 

மீண்டும் பிரச்சினையில் சிக்கிய சிவகார்த்திகேயன்: இந்த முறை என்னனு நீங்களே பாருங்க!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்திற்கு புதிதாக ஒரு பிரச்சனை கிளப்பியுள்ளது. 

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்திற்கு புதிதாக ஒரு பிரச்சனை கிளப்பியுள்ளது. 

கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் திரைப்படம் படு தோல்வியைத் தழுவியது. அதனால் இனி வரும் படங்களையாவது சரியாக கொடுக்க வேண்டும் என்று சிவகார்த்திகேயன் ஒரு குறிக்கோளோடு இருக்கிறார். 

அந்த வகையில் தற்போது இவரை சினிமாவுக்கு அறிமுகம் செய்த பாண்டி ராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார். அதில் சமுத்திரக்கனி, சூரி, யோகி பாபு, அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

siva

 

மேலும் படத்திற்கு எம்.ஜி.ஆர் நடித்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் தலைப்பை வைத்துள்ளதாக ஒரு செய்தி வெளியானது. இதை கேட்ட எங்க வீட்டு பிள்ளை தயாரிப்பு நிறுவனம், ‘எங்க வீட்டுப்பிள்ளை பட டைட்டில் உரிமையை இதுவரை வேறு நபர்களுக்கோ, அல்லது வேறு எந்த  நிறுவனங்களுக்கோ வழங்கப்படவில்லை’ என்று கூறியுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் படத்துக்கு  புதிய சிக்கல் ஒன்று கிளம்பியுள்ளது.