மீண்டும் பிக் பாஸில் களமிறங்கும் ஜூலி?! : சாதுர்யமாக காய் நகர்த்தும் பிக் பாஸ் டீம்!

 

மீண்டும் பிக் பாஸில்  களமிறங்கும் ஜூலி?! : சாதுர்யமாக காய் நகர்த்தும் பிக் பாஸ் டீம்!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான ஜூலி கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை:  பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான ஜூலி கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பல மொழிகளில் பல நட்சத்திரங்களை வைத்து ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி  பிக் பாஸ் .  வெளியுலகத் தொடர்பும் இல்லாமல், 100 நாட்கள் போட்டியாளர்கள் ஒரு வீட்டுக்குள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் விதிமுறை.  தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிகளை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

bigg boss

2017-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஆரவ், ஓவியா, சினேகன், வையாபுரி, காயத்ரி ரகுராம், ஜூலி உள்ளிட்ட மொத்தம் 19 பேர் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர். இதில் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். முதல் பாகத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பையடுத்து  பிக் பாஸ் இரண்டாவது சீசன்  2018 ஆம் ஆண்டு  ஒளிபரப்பானது. இதையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். இதில்  16 பேரும் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் நடிகை ரித்விகா டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

bigg boss

இதைத் தொடர்ந்து தற்போது  பிக் பாஸ் மூன்றாவது சீசன் ஆரம்பமாக உள்ளது.  நிகழ்ச்சியை வழக்கம்போல்  கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். அதற்கான புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. பிக் பாஸ் சீசன் 3 குறித்து தினம் தோறும் ஏதேனும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அந்த வகையில் பிக் பாஸ் 3 போட்டியில் மீண்டும்  ஜூலி  கலந்து கொள்ள இருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. 

julie

‘வீர தமிழச்சி’ என்ற பெயருடன் பிக் பாஸ்  வீட்டிற்குள் வந்து,  மிகவும் கடுமையான விமர்சனத்திற்குள் ஆளானவர் ஜூலி. பிக் பாஸ் நிகழ்ச்சியின் தாக்கம் இன்று வரை ஜூலியின் படிந்து கொண்டே இருக்கிறது. அதனால் தான் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ்-ன் இரண்டாவது சீசனில், முதல் சீசனில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களும் சிறப்பு விருந்தினராக வந்த போது  கூட ஜூலி மட்டும் வரவில்லை. 

julie

இருப்பினும் பிக் பாஸ் முதல் சீசன் போல் இரண்டாவது சீசன் சுவாரஸ்யமாக இல்லை என்ற  ரசிகர்களின் புலம்பல் காரணமாக இந்த சீசனில் எப்படியாவது கொஞ்சம் சர்ச்சையான போட்டியாளர்களை அழைத்து வந்து சுவாரஸ்யத்தைக்  கூட்ட  வேண்டும் என்று திட்டமிட்டுள்ளதாம் பிக் பாஸ் டீம். அதனால் சர்ச்சைக்குப் பெயர்போன ஜூலியை சிறப்பு விருந்தினராக  எப்படியாவது உள்ளே அழைத்து வரவேண்டும் என்று தீவிர முயற்சியில்  களமிறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால்  இதற்கு ஜூலி  சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் அவரது நிலைமை பரிதாபத்திற்குரியது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இது குறித்து எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை. 

julie

முன்னதாக பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது  குறித்த  அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது