மீண்டும் பாடகரான நடிகர் விஜய் சேதுபதி: எந்த ஹீரோ படம் தெரியுமா?

 

மீண்டும் பாடகரான நடிகர் விஜய் சேதுபதி: எந்த ஹீரோ படம் தெரியுமா?

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வள வந்து கொண்டிருக்கிறார்  நடிகர் விஜய் சேதுபதி. தற்போது பேட்ட, சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், சைரா நரசிம்ம ரெட்டி, இயக்குநர் எஸ்.யூ.அருண்குமாரின் படம் உட்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். 

இதில் இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கியிருக்கும் ‘சீதக்காதி’ வரும் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது. ரஜினியுடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்துக் கொண்டிருக்கும் ‘பேட்ட’ திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

இந்நிலையில் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், ஹரீஸ் கல்யாண் நடிக்கும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்ற படத்தில் சாம் சி.எஸ் இசையமைப்பில் ‘சித்தர்’ எனத் தொடங்கும் பாடலை விஜய் சேதுபதி பாடியுள்ளார். தற்போது இதன் ரெக்கார்டிங் முடிந்திருக்கிறது. ஏற்கனவே ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ என்ற படத்தில் இவர் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் விஜய் சேதுபதி ‘புரியாத புதிர்’ படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.