மீண்டும் படமெடுக்கும் பாம்பு; கூகுள் மேப்ஸ் செயலியில் அறிமுகமான சினேக் கேம்!

 

மீண்டும் படமெடுக்கும் பாம்பு; கூகுள் மேப்ஸ் செயலியில் அறிமுகமான சினேக் கேம்!

நோக்கியா போன் கோலோச்சிய காலத்தில், டனேலி அர்மாண்டோ என்பவர் இந்த உருவாக்கிய இந்த விளையாட்டு செல்போன் பிரியர்களின் அபிமான விளையாட்டாக இருந்தது

கலிபோர்னியா: முட்டாள்கள் தினத்தையொட்டி, கூகுள் மேப்ஸ் செயலி சினேக் கேம் எனப்படும் பாம்பு விளையாட்டை மறு உருவாக்கம் செய்து அறிமுகப்படுத்தியுள்ளது.

செல்போன் நிறுவனங்களில் முன்னோடி நிறுவனமான நோக்கியா, தனது 6110 மாடல் செல்போனில் சினேக் கேம் எனப்படும் பாம்பு விளையாட்டை அறிமுகப்படுத்தியது. நோக்கியா போன் கோலோச்சிய காலத்தில், டனேலி அர்மாண்டோ என்பவர் இந்த உருவாக்கிய இந்த விளையாட்டு செல்போன் பிரியர்களின் அபிமான விளையாட்டாக இருந்தது. 

ஆட்டம் துவக்கியதும் வளைந்து நெளியும் பாம்பை அதற்கான இரையை விழுங்க வைக்க வேண்டும். இரையை விழுங்கிய அது வளர்ந்து கொண்டே போகும். இரை தோன்றுவதற்கு ஏற்ப, பாம்பை வளைத்து முன்னேறச்செய்ய வேண்டும். தப்பித்தவறி பக்கவாட்டில் அல்லது மேலும் கீழும் மோதினால் பாம்பு உயிரிழந்து ஆட்டம் முடிந்து விடுவது போல, ஸ்மார்ட் போன்களின் அசுர வளர்ச்சியில் உருவான பல்வேறு கேம்களில் இந்த விளையாட்டும் முடிந்து விட்டது.

google maps snake

இந்நிலையில், முட்டாள்கள் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி சினேக் கேம் எனப்படும் பாம்பு விளையாட்டை மறு உருவாக்கம் செய்து கூகுள் மேப்ஸ் செயலியில் கூகுள் நிறுவனம் கொடுத்துள்ளது. ஆனால், இங்கு வித்தியாசம் என்னவென்றால் இதில் பாம்பு இருக்காது அதற்கு பதில், பேருந்துகள், ரயில்கள் என இருக்கும்.

google maps snake

லண்டன் நகர மாடி பேருந்தை தேர்வு செய்தால், லண்டனில் உள்ள பயணிகளை ஏற்றிக் கொண்டு லண்டன் நகரம் முழுக்க வளம் வரலாம். பயணிகள் ஏற, ஏற, பேருந்து வளர்ந்து கொண்டே போகும். அதேபோல், டோக்கியோ நகர புல்லட் ரயில், சான்பிரான்சிஸ்கோ கேபிள் கார், சிட்னி என ஏதேனும் ஒரு நகரை தேர்வு செய்து விளையாடலாம். உலகம் என்பதை தேர்வு செய்தால், உலகம் முழுவதும் பயணிகளை ஏற்றிக் கொள்ளலாம். விளையாட்டை விளையாட கிளிக் செய்யவும்

google maps snake

ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ்., ஆகிய தளங்களிலும் இந்த கேமை விளையாடலாம். ஸ்மார்ட்போன் மற்றும் டெஸ்க்டாப் என இரண்டிலுமே இதை விளையாடலாம்.

இதையும் வாசிங்க

அ.தி.மு.க.வில் இணையும் தினகரன்: சர்ச்சையை கிளப்பும் மதுரை ஆதீனம்