மீண்டும் தொடர் வேலைநிறுத்தம்: அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்!

 

மீண்டும் தொடர் வேலைநிறுத்தம்: அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்!

கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி நடந்த இந்த போராட்டத்தில் , மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய தமிழக அரசு  6 வாரங்களில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமென  உறுதியளித்தது.

சென்னை : ஊதிய உயர்வுடன் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கையை  நிறைவேற்றாவிட்டால் இம்மாதம் முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட போவதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

மருத்துவ மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு, ஊதிய உயர்வு  உள்ளிட்ட சில கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசு மருத்துவர்களில் ஒரு பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி நடந்த இந்த போராட்டத்தில் , மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய தமிழக அரசு  6 வாரங்களில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமென  உறுதியளித்தது.

doctors

இந்த கால  அவகாசம்  கடந்த 8ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ள நிலையில் நேற்று அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் அவசர செயற்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால்  இந்த கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

doctors

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர், இடைத்தேர்தல் முடிந்தவுடன் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், இந்த மாதம் 25 ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக எச்சரித்துள்ளனர்.