மீண்டும் தேர்தலில் போட்டியிட தயாரா? சிவ சேனாவுக்கு சவால் விடுத்த தேவேந்திர பட்னாவிஸ்…

 

மீண்டும் தேர்தலில் போட்டியிட தயாரா? சிவ சேனாவுக்கு சவால் விடுத்த தேவேந்திர பட்னாவிஸ்…

மீண்டும் தேர்தலில் போட்டியிட தயாரா என சிவ சேனாவுக்கு பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் சவால் விடுத்துள்ளார்.

சிவ சேனா, காங்கிரஸ் இடையிலான மோதலால் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு தானாகவே கவிழ்ந்து விடும் என பா.ஜ.க. அண்மையில் தெரிவித்தது. இதற்கு பதிலடியாக சிவ சேனா தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே, மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசை முடிந்தால் கவிழ்த்து பாருங்கள் என பா.ஜ.க.வுக்கு சவால் விடுத்தார்.

உத்தவ் தாக்கரே

இந்நிலையில், மீண்டும் தேர்தலில் போட்டியிட தயாரா என சிவ சேனாவுக்கு மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தேவேந்திர பட்னாவிஸ் சவால் விடுத்துள்ளார். மேலும், மகா விகாஸ் அகாடி கூட்டணியை தனி ஒரு கட்சியாக பா.ஜ.க. தோற்கடிக்கும் வல்லமை கொண்டது எனவும் அவர் தெரிவித்தார்.

ஜே.பி. நட்டா

மும்பையில் நடைபெற்ற பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசுகையில் கூறுகையில், மகாராஷ்டிராவில் எதிர்காலத்தில் கூட்டணி அவசியம் இல்லை என்பதை உறுதி செய்வது அவசியம். அடுத்த தேர்தல்கள் பா.ஜ.க.வுக்கும் மற்ற கட்சிகளுக்கும் இடையிலான  போட்டியாகதான் இருக்க வேண்டும். மாநிலத்தில் அடுத்த தேர்தலை பா.ஜ.க. கைப்பற்றும் என்பதை என்னால் காண முடிகிறது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கூட்டணி நம்பத்தகாத மற்றம் இயற்கைக்கு மாறானது. அடுத்த தேர்தலில் தனியாக நின்று  பா.ஜ.க. தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும் என தெரிவித்தார்.