மீண்டும் திமுக செய்தித் தொடர்பு செயலாளராக டி.கே.எஸ் இளங்கோவன் நியமனம்!

 

மீண்டும் திமுக செய்தித் தொடர்பு செயலாளராக டி.கே.எஸ் இளங்கோவன் நியமனம்!

டி.கே.எஸ்.இளங்கோவனின்  செய்தித் தொடர்பு செயலாளர் பதவி  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி பறிக்கப்பட்டது

சென்னை:  திமுக செய்தித் தொடர்பு செயலாளராக டி.கே.எஸ். இளங்கோவன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக செய்தித் தொடர்பு செயலாளராக இருந்த  டி.கே.எஸ்.இளங்கோவனின்  செய்தித் தொடர்பு செயலாளர் பதவி  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி பறிக்கப்பட்டது.  இது தொடர்பாக  அக் கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிக்கை வெளியிட்டார்.இருப்பினும் அவர் எதற்காக விடுவிக்கப்பட்டார்  என்பது குறித்த தகவல் தெரிவிக்கப்படாததால் தொண்டர்கள் குழப்பமடைந்தனர்.

 

இந்நிலையில் டி.கே.எஸ். இளங்கோவன் மீண்டும் திமுக செய்தித் தொடர்பு செயலாளராகத் தலைமை கழகம் அறிவித்துள்ளது. முன்னதாக கருணாநிதி சிலை திறப்பு குறித்து தன்னிச்சையாகப் பேட்டி அளித்ததால் செய்தி தொடர்பு செயலாளர் பொறுப்பிலிருந்து டிகேஎஸ் இளங்கோவன் நீக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.