மீண்டும் ட்விட்டரில் மோதிக்கொண்ட அஜித்- விஜய் ரசிகர்கள்!

 

மீண்டும் ட்விட்டரில் மோதிக்கொண்ட அஜித்- விஜய் ரசிகர்கள்!

அஜித், விஜய் ரசிகர்கள் மீண்டும் நேற்று ஹாஸ் டாக் மூலம் மோதிக் கொண்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை: அஜித், விஜய் ரசிகர்கள் மீண்டும் நேற்று ஹாஸ் டாக் மூலம் மோதிக் கொண்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் விஜய். இவரின் படம் வரும் ஜூன் 22-ம் தேதி விஜய் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கின்றனர். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு பல முன்னணி திரையரங்குகளில் விஜய்யின் ஹிட் படங்கள் திரையிடப்படவுள்ளன. 

தற்போது தளபதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, ‘தளபதி 63’ படக்குழுவினர் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில் ஜூன் 21-ம் தேதி மாலை படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், ஜூன் 22-ம் தேதி அதிகாலை 12 மணியளவில் படத்தின் 2-வது லுக்கும் வெளியாகும் என்று அறிவித்ததிருந்தனர்.  இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர்.

அதுமட்டுமின்றி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டர் ஒன்றை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார். அது நல்ல வரவேற்பை பெற்று வைரலாக பரவியது. தொடர்ச்சியாக விஜய் தொடர்பான விஷயங்கள் வெளியானதால் , #ThalapathyBDayCDP, #ThalapathyBDayCelebrations, #thalapathy63, #vijayanna உள்ளிட்ட சில ஹேஷ்டேக்குகள் ட்விட்டர் பக்கத்தில் உலகம் முழுவதும் ட்ரெண்டாகின. 

vijay

இது அஜித் ரசிகர்கள் மிகுந்த கோபத்தை உண்டாக்கியதால், உடனடியாக விஜய்க்கு எதிராக #june22vijaydeathday என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்தனர். இந்திய அளவில் முதல் இடத்தில் விஜய் பிறந்த நாள் தொடர்பான ஹேஷ்டேக்கும், இரண்டாம் இடத்தில் விஜய்க்கு எதிரான ஹேஷ்டேக்கும் ட்ரெண்டானது. 

a

விஜய்க்கு எதிரான ஹேஷ்டேக் ட்ரெண்டுக்கு கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். மேலும் சிலரோ அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ டீஸரில் வரும் ‘ஒருத்தர் மேல நீங்க விசுவாசம் காட்டுவதற்காக ஏன் இன்னொருத்தரை அசிங்கப்படுத்துறீங்க’ என்ற வசனத்தை  குறிப்பிட்டு, இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டுக்கு எதிராக பதிவு செய்தனர். 

இதில் இரண்டு ஹீரோவின் ரசிகர்கள் இல்லாதவர்கள் உலகில் எத்தனையோ பிரச்னை இருக்கிறது, மக்கள் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர், அந்த நிலையில் இது போன்ற ஹேஷ்டேக் சண்டை எதற்கு என்று தங்களுடைய கண்டனத்தைப் பதிவு செய்தனர். 

என்ன தான் அஜித்- விஜய் நண்பர்களாகப் பழக்கி வந்தாலும் அவரது ரசிகர்கள் மத்தியில் இது போன்ற சண்டை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.