மீண்டும் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டியை குறைத்த எஸ்.பி.ஐ…… வங்கியில கணக்கு வைத்திருக்கும் 44.51 கோடி பேருக்கு பாதிப்பு…

 

மீண்டும் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டியை குறைத்த எஸ்.பி.ஐ…… வங்கியில கணக்கு வைத்திருக்கும் 44.51 கோடி பேருக்கு பாதிப்பு…

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) ஒரு மாத காலத்துக்குள் இரண்டாவது முறையாக சேமிப்பு கணக்குகளுக்கான வட்டியை குறைத்துள்ளது. அனைத்து சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை 2.75 சதவீதமாக நிர்ணயம் செய்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. கடந்த மார்ச் மாதத்தில் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டியை குறைத்தது. அப்போது அனைத்து சேமிப்பு கணக்குகளுக்கான வட்டியை ஒரே மாதிரியாக 3 சதவீதமாக குறைத்தது. தற்போது மீண்டும் சேமிப்பு கணக்களுக்கான வட்டியை மீண்டும் எஸ்.பி.ஐ. குறைத்துள்ளது.

வட்டி குறைப்பு

தற்போது அனைத்து சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை ஒரே மாதிரியாக 2.75 சதவீதமாக குறைத்து நிர்ணயம் செய்துள்ளதாக எஸ்.பி.ஐ. அறிவித்துள்ளது. அதாவது ரூ.1 லட்சம் வரையிலான சேமிப்பு கணக்குகளுக்கும், ரூ.1 லட்சத்துக்கு அதிகமாக இருப்பு உள்ள சேமிப்பு கணக்குகளுக்கான வட்டியை 3 சதவீதத்திலிருந்து 2.75 சதவீதமாக நிர்ணயம் செய்துள்ளது.

எஸ்.பி.ஐ. வங்கி கிளை

நிதி அமைப்பில் உபரி பணப்பழக்கம் நிலவுவதால் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டியை குறைத்துள்ளதாவும், இந்த புதிய வட்டி விகிதம் வரும் 15ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக எஸ்.பி.ஐ. அறிவித்துள்ளது. எஸ்.பி.ஐ.யின் சேமிப்பு கணக்களுக்கான வட்டி குறைப்பு நடவடிக்கையால் அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள 44.50 கோடி பேர் பாதிக்கப்படுவர்.