மீண்டும் சென்னை திரும்பும் நோக்கியோ புத்துயிர் பெருமா ஸ்ரீபெரும்புதூர் ?

மீண்டும் சென்னை திரும்பும் நோக்கியோ புத்துயிர் பெருமா ஸ்ரீபெரும்புதூர் ?

சார்ஜர் மற்றும் அடாப்டர் தயாரிக்கும் சால்காம்ப், போன் கேஸ்கள் வழங்கி வந்த லைட் ஆன் மொபைல்ஸ், ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தை வாங்கியுள்ளது. சுமார் 1,300 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள இந்நிறுவனம், 2020 மார்ச் மாதத்திற்குள் உற்பத்தியைத் தொடங்க வாய்ப்புள்ளது. மேலும் சீனாவை சேர்ந்த லக்ஸ்ஷேர், விண்டெக்கின் உற்பத்தி ஆலையை வாங்க முடிவு செய்துள்ளது. 
இந்நிறுவனங்கள் முதலீடு செய்வதன்மூலம், ஸ்ரீபெரும்புதூரின்  தொழிற்சாலைகள் புத்துயிர் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் பிரம்மாண்டமாக இயங்கி வந்த நோக்கியா செல்போன் தொழிற்சாலை வரி ஏய்ப்பு புகார் காரணமாகவும், ஸ்மார்ப் போன்களின் ஆதிக்கம் காரணமாகவும் 2015ம் ஆண்டு மூடப்பட்டது. இதனால், நேரடியாகவும், மறைமுகமாவுகம் 30,000 பேர் வேலையிழந்தனர். மேலும் ஸ்ரீபெரும்புதூரில் மற்ற நிறுவனங்களின் முதலீடுகளும் குறைந்து, மோட்டோரலா, சாம்சங் நிறுவனங்கள் உத்தரபிரதேசத்திற்கும், ஆந்திராவுக்கு ஃபாக்ஸ்கான் நிறுவனமும் இடம்பெயர்ந்தது. தற்போது நோக்கியா நிறுவனம் ஸ்மார்ட் போன்கள் தயாரிக்க தொடங்கியுள்ளதால், உதிரிபாகங்கள் வழங்கும் நிறுவனங்களும் புத்துயிர் பெற்றுள்ளது. அந்த புதிய ஆலைகள் மீண்டும் ஸ்ரீபெரும்புதூரில் நிறுவப்பட உள்ளன.

Nokia

சார்ஜர் மற்றும் அடாப்டர் தயாரிக்கும் சால்காம்ப், போன் கேஸ்கள் வழங்கி வந்த லைட் ஆன் மொபைல்ஸ், ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தை வாங்கியுள்ளது. சுமார் 1,300 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள இந்நிறுவனம், 2020 மார்ச் மாதத்திற்குள் உற்பத்தியைத் தொடங்க வாய்ப்புள்ளது. மேலும் சீனாவை சேர்ந்த லக்ஸ்ஷேர், விண்டெக்கின் உற்பத்தி ஆலையை வாங்க முடிவு செய்துள்ளது. 
இந்நிறுவனங்கள் முதலீடு செய்வதன்மூலம், ஸ்ரீபெரும்புதூரின்  தொழிற்சாலைகள் புத்துயிர் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவில் தற்போதுள்ள 268 மொபைல் உற்பத்திப் பிரிவுகளில் நான்கு மட்டுமே தமிழ்நாட்டில் உள்ளன. இப்புதிய தொழில் பூங்காவிற்காக, புதிய மென்பொருள் மற்றும் வன்பொருள் உற்பத்திக் கொள்கையை நான்கு முதல் எட்டு வாரங்களில் அரசு நிர்ணயிக்கும் என்று மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.