மீண்டும் சிக்கலில் சிக்கும் அனில் அம்பானி….. வங்கிகளுக்கு தவணை தொகையை செலுத்த தவறிய ரிலையன்ஸ் இன்ப்ராஸ்டிரக்சர்…..

 

மீண்டும் சிக்கலில் சிக்கும் அனில் அம்பானி….. வங்கிகளுக்கு தவணை தொகையை செலுத்த தவறிய ரிலையன்ஸ் இன்ப்ராஸ்டிரக்சர்…..

யெஸ் வங்கி மற்றும் ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தவணை தொகையை செலுத்தவில்லை என அனில் அம்பானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் ரிலையன்ஸ் இன்ப்ராஸ்டிரக்சர் தெரிவித்துள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் மெகா கோடீஸ்வரர்களில் ஒருவராக திகழ்ந்தவர் அனில் அம்பானி. அவரது நிலைமை தற்போது பரிதாபமாக உள்ளது. வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திவால் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அனில் அம்பானியின் குழுமத்தை சேர்ந்த ரிலையன்ஸ் இன்ப்ராஸ்டிரக்சர் நிறுவனம் வங்கிகள் மற்றும் இதர கடன்தாரர்களுக்கு செலுத்த வேண்டிய தவணை தொகையை செலுத்தவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

ரிலையன்ஸ் இன்ப்ராஸ்டிரக்சர்

 

ரிலையன்ஸ் இன்ப்ராஸ்டிரக்சர் நிறுவனம் பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், 2020 ஜனவரி 23 முதல் பிப்ரவரி 1ம் தேதி வரையிலான காலத்தில் கடன்தாரர்களுக்கு வட்டி மற்றும் அசல் செலுத்தவில்லை. எஸ்.ஆர்.ஈ.ஐ. எகியுப்மெண்ட் பைனான்ஸ் மற்றும் யெஸ் வங்கிக்கு முறையே ரூ.1.04 கோடி மற்றும் ரூ.20.15 கோடி அசல் தொகை செலுத்தவில்லை. மேலும் யெஸ் வங்கிக்கு செலுத்த வேண்டிய ரூ.30.12 கோடியும் செலுத்த தவறிவிட்டது. ஜம்மு அண்டு காஷ்மீர் வங்கி மற்றும் எஸ்.ஆர்.ஈ.ஐ. எகியுப்மெண்ட் பைனான்ஸ் ஆகியவற்றுக்கு செலுத்த வேண்டிய வட்டியும் செலுத்தவில்லை.

யெஸ் வங்கி

2020 ஜனவரி 31ம் தேதி நிலவரப்படி ரிலையன்ஸ் இன்ப்ராஸ்டிரக்சர், வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களில் வாங்கிய மொத்த கடன் ரூ.3,872 கோடியாக உள்ளது. மேலும் அன்றைய நிலவரப்படி நிறுவனத்தின் மொத்த கடன்பொறுப்பு ரூ.6,178 கோடியாக உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.