மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக்! 

 

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக்! 

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவன ஊழலில் சிக்கியதை அடுத்து, ஆயிரக்கணக்கான செயலிகளை பேஸ்புக் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.  

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவன ஊழலில் சிக்கியதை அடுத்து, ஆயிரக்கணக்கான செயலிகளை பேஸ்புக் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.  

400க்கும் மேற்பட்ட செயலி வடிவமை‌ப்பாளர்களுக்கு தொடர்புடைய செயலிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த செயலிகளால் வலைதள பயன்பாட்டாளர்களுக்கு ஆபத்து என்றும் தெரிவித்துள்ளது. அந்த செயலிகள் குறித்து விரிவாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் பேஸ்புக் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

facebook

அரசியலுக்காக பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை திருடிய குற்றச்சாட்டில் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் சிக்கியதை அடுத்து, பேஸ்புக் நிறுவனத்துக்கு 4 கோடியே 72 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தகவல்கள் திருடப்பட்டது குறித்து பேஸ்புக் நிறுவனம் விசாரணை நடத்தியதில், செயலிகள் மூலமே இந்த முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே சந்தேகிக்கப்படும் ஆயிரக்கணக்கான செயலிகளை பேஸ்புக் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.