மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமலா பால்: வைரலாகும் தம் அடிக்கும் போட்டோக்கள்!

 

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமலா பால்: வைரலாகும் தம் அடிக்கும் போட்டோக்கள்!

நடிகை அமலாபால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைபிடிக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சியானது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

சென்னை: நடிகை அமலாபால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைபிடிக்கும் போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், தனுஷ் ஆகிய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளவர் நடிகை அமலாபால். இயக்குநர் ஏ.எல். விஜய்யுடனான திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்ததையடுத்து சினிமா பக்கம் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் நடிகர் விஷ்ணுவுடன் அவர் நடித்திருந்த ’ராட்சசன்’ படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. ’ராட்சசன்’ படத்தை அடுத்து மேயாத மான் பட இயக்குநர் இயக்கும் ‘ஆடை’ படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில், அமலாபால் புகை பிடிப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அமலா பால் தம் அடித்துக்கொண்டே புகையை மூக்கு வழியாக வெளியேற்றுவது  போல் அந்த புகைப்படம் உள்ளது. முன்னதாக அமலா பால்  திருட்டுப் பயலே 2 படத்திலும் தம் அடிப்பது போல நடித்திருந்தார்.

ஏற்கனவே நடிகர்கள் விஜய், விஷால், ஹன்சிகா போன்றோர் புகைபிடிப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமலா பால் புகைபிடிக்கும் புகைப்படங்கள்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.