மீண்டும் குறைந்தது தங்க விலை !

 

மீண்டும் குறைந்தது தங்க விலை !

கடந்த மாதம் ரூ.29,700க்கும் மேல் விற்கப்பட்டு வந்த தங்க விலை கிடுகிடுவெனக் குறைந்து கொண்டே வந்தது.

கடந்த மாதம் ரூ.29,700க்கும் மேல் விற்கப்பட்டு வந்த தங்க விலை கிடுகிடுவெனக் குறைந்து கொண்டே வந்தது. அதன் பின், மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்க விலை கடந்த மாதம் 21ஆம் தேதி முதல் குறைந்து கொண்டே வந்தது. அதன் பின், 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் தங்க விலை ஏற்றத்தைச் சந்தித்தது. தற்போது மீண்டும் தங்கவிலை குறைந்துள்ளது. 

ttb

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.19 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,627க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.29,016க்கு விற்கப்படுகிறது.

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 31 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.47.80க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.3 10 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.47,800க்கு விற்கப்படுகிறது.