மீண்டும் எங்களயே ஆட்சியில் உட்கார வையுங்க- அமித் ஷா வேண்டுகோள்

 

மீண்டும் எங்களயே ஆட்சியில் உட்கார வையுங்க- அமித் ஷா வேண்டுகோள்

சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள மகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் மக்கள் அதிகளவில் வாக்களித்து பா.ஜ.வை பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என பா.ஜ. தலைவர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையம் அந்த மாநிலங்களில் அக்டோபர் 21ம் தேதியன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. மேலும் 24ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்  எனவும் தெரிவித்தது.

தேர்தல்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் ஆணையத்தின் தேர்தல் அறிவிப்பை வரவேற்பதாக டிவிட் செய்துள்ளார். இது தொடர்பாக அமித் ஷா தனது தொடர்ச்சியான டிவிட்களில் கூறியிருப்பதாவது: தேர்தல் ஆணையத்தின் மகாராஷ்டிரா மற்றும் அரியானா சட்டப்பேரவை தேர்தல்கள் அறிவிப்பை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். தேர்தல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய தேர்தல் திருவிழா மட்டுமல்ல, நம் நாட்டின் மற்றும் மாநிலங்களின் முன்னேற்றம் மற்றும் நல்ல நிர்வாகத்தின் பாதையில் வைத்திருப்பதும் அதன் அர்த்தமாகும்.

மகாராஷ்டிரா, அரியானாவின் அனைத்து  வாக்களார்களை குறிப்பாக இளைஞர்கள் அதிகளவில் ஓட்டு போட வேண்டும் மற்றும் வலுவான அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதிலும், மாநிலங்களின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை உறுதி செய்வதில் பங்கு பெற வேண்டும்.

தேர்தல்

கடந்த 5 ஆண்டுகளில் மகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் பா.ஜ.க. தலைமையிலான அரசுகள் தங்களது மாநிலங்களை வளர்ச்சி மற்றும் நல்லாட்சியின் புதிய உயரத்துக்கு கொண்டு சென்றுள்ளன. அரசாங்களின் சாதனைகளை மக்களிடம் முன்னிலைப்படுத்துவுடன், நமது அரசாங்கங்கள் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் இந்த மாநிலங்களின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அதில் பதிவு செய்துள்ளார்.