மீண்டும் உருவாகும் யுவன்- சீனு ராமசாமி கூட்டணி! ஹீரோ யாரு தெரியுமா? 

 

மீண்டும் உருவாகும் யுவன்- சீனு ராமசாமி கூட்டணி! ஹீரோ யாரு தெரியுமா? 

இயக்குநர் சீனுராமசாமி – யுவன் கூட்டணியில் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளனர்.

சென்னை: இயக்குநர் சீனுராமசாமி – யுவன் கூட்டணியில் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் சில நல்ல கருத்துள்ள படங்களை இயக்கியவர் இயக்குநர் சீனுராமசாமி. சீனு ராமசாமி – யுவன் கூட்டணியில் ஏற்கனவே தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை,தர்மதுரை போன்ற படங்கள் வெளியாகி ஹிட் அடித்தன.

சீனு ராமசாமி படத்தில் யுவன் பாடல் பக்க பலமாக அமைவதால் தான் இவர்களின் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கு போல? என்று பலரும் கோலிவுட் வட்டாரத்தில் மறைமுகமாக பேசிவருகின்றனர்.

இந்த நிலையில் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படம் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இவர் நடிகர் அருள்நிதியை ஹீரோவாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார்.

seenu ramasamy

இப்படத்திற்கும் யுவன்ஷங்கர் ராஜா தான் இசையமைக்கவுள்ளார்.மேலும் டைம் லைன் சினிமாஸ் சார்பில் சுந்தர் அண்ணாமலை இப்படத்தை தயாரிக்கிறார். விரைவில் இப்படத்தைப் பற்றிய மற்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பாக்கப்டுகிறது.

இதையும் படிங்க: ரகசிய திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்!