மீண்டும் உருவாகிறது பியார் பிரேமா காதல் படக் கூட்டணி! 

 

மீண்டும் உருவாகிறது பியார் பிரேமா காதல் படக் கூட்டணி! 

பியார் பிரேமா காதல் பட இயக்குநர் இளன் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

சென்னை: பியார் பிரேமா காதல் பட இயக்குநர் இளன் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஹரீஷ் கல்யாண்- ரைசா இணைந்து நடித்த திரைப்படம் பியார் பிரேமா காதல். கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான இப்படத்தை அறிமுக இயக்குநர் இளன் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒய்.எஸ்.ஆர் புரொடக்ஷன்ஸ் மூலம் இப்படத்தைத் தயாரித்திருந்தார். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமின்றி பாக்ஸ் ஆபீஸிலும் நல்ல வசூலை குவித்தது.

ரைசா

இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த கூட்டணி உருவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குநர் இளன் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாண்ஹீரோவாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

harish kalyan

மேலும் ஹரீஷ் கல்யாண்ஜோடியாக நடிக்கப் பிரபல கதாநாயகியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.