மீண்டும் உயர்ந்தது தங்க விலை..!

 

மீண்டும் உயர்ந்தது தங்க விலை..!

தங்க விலை கடந்த மாதம் 30 ஆயிரத்திற்கும் மேல் விற்கப்பட்டது.

தங்க விலை கடந்த மாதம் 30 ஆயிரத்திற்கும் மேல் விற்கப்பட்டது. இந்த அதிரடி விலை உயர்வு மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து சரிந்த தங்க விலை, இந்த மாத துவக்கம் முதல் உயர்ந்து கொண்டே வருகிறது. 

Gold

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.24 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.3,687 க்கு விற்கப்படுகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 29,496 க்கு விற்கப் படுகிறது. 

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 90 காசுகள் உயர்ந்து ரூ.49.90 க்கு விற்கப்படுகிறது. அதன் படி, ஒரு கிலோவிற்கு ரூ.900 உயர்ந்து ஒரு கிலோ  வெள்ளி ரூ.49,900 க்கு விற்கப் படுகிறது.